• வேலூர் 10-ம் வகுப்பு 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பாராட்டு.

·        வேலூர் மாவட்டத்தில் 2025-26-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொது தேர்வில்  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற 42 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் 475-க்கு மேல் மதிப்பெண் பெற்ற 110  மாணவ, மாணவிகளை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.

வேலூர் மாவட்டத்தில் 2025-26-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  100% தேர்ச்சி பெற்ற  42 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் 475-க்கு மேல் மதிப்பெண் பெற்ற 110 மாணவ, மாணவிகளை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  வழங்கினார்.  

வேலூர் மாவட்டத்தில் 2025-26-ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொது தேர்வில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் 42 பள்ளிகளில் 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த 42 பள்ளிகளை சார்ந்த தலைமை ஆசிரியர்களை மாவட்ட ஆட்சி தலைவர் நேரடியாக அழைத்து அவர்களை பாராட்டி கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் 475-க்கு மேல் மதிப்பெண் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளை நேரடியாக அழைத்து அவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

மாணவ , மாணவிகளிடையே மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது

நம்முடைய மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு மற்றும் அரசு நிதி உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்று 475 க்கு மேல் 110 மாணவ, மாணவிகள் மதிப்பெண் பெற்றுள்ளனர். சிறப்பான மதிப்பெண்களை பெற்று இந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். மாணவ, மாணவிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

ஒரு  குழந்தை நல்லபடியாக படித்தால் மட்டுமே அந்த குடும்பம் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மேம்படும். அரசு பள்ளிகளில் பயின்று மிகச்சிறந்த மதிப்பெண்களை பெற்ற இந்த மாணவ, மாணவிகள் தங்களுடைய அடுத்த கட்ட படிப்புகளிலும், 12-ம் வகுப்பு படிப்பிலும் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும்.

அரசு மற்றும் அரசு நிதி உதவிப்பெறும் பள்ளிகளில் 110 மாணவ, மாணவிகள் 475 மதிப்பெண்கள் பெற்றது. பிற மாணவ மாணவிகளுக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளிக்க கூடிய வகையில் உள்ளது. இனிவரும் காலங்களில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 100% தேர்ச்சி பெற வேண்டும் என்பது நம்முடைய உயரிய எண்ணமாக உள்ளது. மாணவ, மாணவிகள் அத்தகைய சாதனையை புரிந்து மாவட்டத்திற்கு மென்மேலும் சிறப்பு சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா, மாவட்ட கல்வி அலுவலர்கள் செந்தில்குமார் (இடைநிலை), கேசவன் (தொடக்கக்கல்வி) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.