• சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் தேர் திருவிழா.
· சத்துவாச்சாரி புகழ்பெற்ற சாலை கெங்கையம்மன் தேர் திருவிழா.
· பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு.
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள புகழ்பெற்ற சாலை கெங்கையம்மன் ஆலய தேர் திருவிழா நடைபெற்றது. இதில் கெங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களை செய்து மரத்தேரில் கெங்கையம்மனை வைத்து பல்வேறு மேளதாளங்கள் முழங்க பக்தி பரவசத்துடன் திரளான பக்தர்கள் வந்து தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பக்தர்கள் தேரின் மீது பூக்கள், பழம், உப்பு, மிளகு ஆகியவைகளை வீசி எறிந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இளைஞர்களூம் மேளதாளங்கள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் திருவிழாவினை கொண்டாடினர்.

Comments
Post a Comment