• வேலூரில் டாக்டர் ஐடா ஸ்கடர் அம்மையார் நினைவுதினம்.

 ·        வேலூரில்  டாக்டர் ஐடா ஸ்கடர் அம்மையார் 66-ம் ஆண்டு நினைவுதினம் – மலரஞ்சலி.

     வேலூரில் உலகப் புகழ்பெற்ற சி.எம்.சி. மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஐடா ஸ்கடர் அம்மையார் அவர்களின் 66-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு டாக்டர் ஐடா ஸ்கடர் அன்பு கரங்கள் அறக்கட்டளை சார்பில் வேலூர் டோல்கேட்டில் அமைந்துள்ள ஐடா ஸ்கடர் நினைவிடத்தில் மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

           தொடர்ந்து கண்ணா ஓட்டல் அருகில் உள்ள டாக்டர் ஐடா ஸ்கடர் திருவுருவ சிலைக்கு வேலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.வினோத்கண்ணன் மாலை அணிவித்து வணங்கினார்.     இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் .திருநாவுக்கரசு, செயலாளர் ஐடா. ஜி.தவசீலன், பொருளாளர் ஆர்.தேவபிரகாசம், துணைதலைவர் பி.ரவிகுமார், இணைசெயலாளர்கள் பேராசிரியர்கள் ஜான் ஞானக்கண்ணு, பேராசிரியர் பி.சி.இரத்தினம், செயற்குழு உறுப்பினர்கள் கவிஞர் ரெஜி, மகிமை ரூபஸ், மேஜர் விவேகானந்தன், தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி, சீனு () சிவகுமார், பூ மார்க்கெட் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் கம்பன் கழக செயலாளர் வெ.சோலைநாதன், அப்பு பால் வி.எம்.அப்பு பாலாஜி, அறம் செய்யும் அறக்கட்டளை தலைவர் விநாயகம், ஆசிரியர் திருமலை, திவாகர் சி.எம்.சி ஆண்ட்ரூஸ், இளங்கோவன்  மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.