• வேலூரில் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள்.

·         வேலூரில் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள்.  

               வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள ஏலகிரி அரங்கில்  பி.கே.எம் பீனிக்ஸ் சிலம்பம் சங்கம் மற்றும் வீரகலைகள் சிலம்பம் சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. இதனை ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் துவங்கி வைத்து பரிசுகளையும் வெள்ளி காசுகளையும் சான்றுகளையும்  வழங்கினார்

     இப்போட்டிகளில் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 14 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் தூத்துக்குடியை சேர்ந்த பூமிகா முதலிடம் வென்றார். 17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் வேலூரை சேர்ந்த ஹாசினாவும், 14 வயது ஆண்களில்  நவீன்குமாரும், பொது பிரிவில் வேலூரை சேர்ந்த சித்ரா முதலிடம் வென்றார். 19 வயதிற்குடப்பட்டோருக்கான பிரிவில் மீனாட்சி முதலிடம் வென்றார். இவ்விழாவில் திரளான மாணவர்களும், பெற்றோர்களும், விளையாட்டு ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.