• வேலூர் மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை அமைச்சர் ஆய்வு.

·        வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் எரிபொருள் விற்பனை நிலையத்தை கூட்டுறவு துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு.

வேலூர் அண்ணா சாலையில் அமைந்துள்ள அரசு கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் எரிபொருள் விற்பனை நிலையத்தை  கூட்டுறவு துறை அமைச்சர் வ.காந்திராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாண்புமிகு அமைச்சர் கூட்டுறவு பண்டக சாலையில் உள்ள பொருட்களின் இருப்பு விவரங்களையும், அனைத்து பொருட்களிலும் உற்பத்தி செய்யப்பட்ட நாள் மற்றும் பயன்படுத்தப்பட வேண்டிய நாள் ஆகியவற்றின் விவரங்கள் பதியப்பட்டுள்ளதா என்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்களில் உற்பத்தி நாள் மற்றும் பயன்பாட்டு நாள் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும். இதில் எந்த ஒரு இடத்திலும் தவறு நடைபெற கூடாது என கூட்டுறவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 தொடர்ந்து கூட்டுறவு பண்டக சாலையில் உள்ள பொருட்களின் இருப்பு பதிவேடுகள் மற்றும் விற்பனை பதிவேடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து கூட்டுறவு பண்டசாலைகளுக்கு வழங்கப்படும் பொருட்களை பேக்கிங் செய்யும் அமைவிடத்திற்கு சென்று அங்கு பொருட்கள் எவ்வாறு பேக்கிங் செய்யப்படுகிறது என்பதையும், அப்பொருட்கள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை கொண்டு வரப்பட்டு பேக்கிங் செய்யப்படுகிறது என்ற விவரங்களையும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.  மேலும் இந்த பொருட்களை முறையாக, பாதுகாப்பாக, தரத்துடன் பேக்கிங் செய்து நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என்பதை அறிவுறுத்தினார்.

 இதனைத் தொடர்ந்து பண்டக சாலைக்கு அருகில் இருந்த கூட்டுறவு பண்டக சாலையின் எரிபொருள் விற்பனை நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். எரிபொருள் விற்பனை நிலையத்தில் இன்று காலை இருந்த பெட்ரோல் மற்றும டீசல் ஆகிய எரிபொருட்களின் அளவு அதன் பிறகு விற்பனை செய்யப்பட்ட அளவு தற்போது இருப்பில் உள்ள எரிபொருள் அளவு ஆகியவற்றை தானே நேரடியாக அளவுகோல் வைத்து ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் கூட்டுறவு துறை அலுவலர்களிடம் வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் உறுப்பினர்கள் மற்றும் பங்கு தொகை விவரங்களையும், மொத்த கிளை அலுவலகங்களின் விவரங்கள், மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் வழங்கும் நிலையங்கள், மருந்தகங்கள், பண்டக சாலை நடத்தும் நியாய விலை கடைகள், கூட்டுறவு துறையின் இணைப்பு சங்கங்கள், இணைப்பு சங்கங்கள் நடத்தும் நியாய விலை கடைகள், கூட்டுறவு கிடங்குகள், நுகர்வோருக்கான பொருட்களை தினசரி நகர்வு செய்யும் பணிக்கு பயன்படுத்தப்படும் லாரிகளின் விவரங்கள்,  பணியாளர்களின் விவரங்கள் போன்ற பல்வேறு விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு அரசின் அனைத்து விதமான திட்டங்களும் எவ்வித குறைபாடும் இன்றி சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகவும், அதற்கேற்றார் போல் அலுவலர்கள் கூட்டுறவு துறையின் மூலம் நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்களை தகுந்த நேரத்திலும், தரமானதாகவும், தங்கு தடையின்றி வழங்குவதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர்  .காந்திராஜ் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சி தலைவர் வே. இரா.சுப்புலெட்சுமி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.ம.வினோத்கண்ணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் ச . திருகுண ஐயப்பதுரை, துணை பதிவாளர்கள் சத்யநாராயணன், சுவாதி, வேல்முருகன், கோகிலா, சுரேஷ்குப்தா, லட்சுமணசாமி, பிரபு உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.