• விபத்தில் மூளை சாவடைந்த நெடுஞ்சாலை துறை ஊழியர் உடல் உறுப்புகள் தானம்.
· விபத்தில் மூளை சாவடைந்த நெடுஞ்சாலை துறை ஊழியர் உடல் உறுப்புகள் தானம்.
திருவண்ணாமலை, போளூரில் வசித்து வந்தவர் மதன்குமார் (வயது 36) நெடுஞ்சாலை துறையில் தட்டச்சு பணியாளராக பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த மே மாதம் 17 அன்று இரு சக்கர வாகனத்தில் பயணித்தபோது சறுக்கி விழுந்தார்.
பின்னர் ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுதாக்கில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, மே 21 அன்று இரவு 7 மணிக்கு அவருக்கு மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தின்படி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அதன்படி ஒரு சிறுநீரகம் நாராயணி மருத்துவமனைக்கும், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது.

Comments
Post a Comment