Posts

• விஐடி ஸ்டார்ஸ் தினம்.

Image
·         விஐடி ஸ்டார்ஸ் தினம்.    ·         கிராமப்புற மாணவர்களுக்கான உயர்கல்வி வழங்கும் திட்டம்       கிராமப்புற மாணவர்களுக்கான உயர்கல்வி வழங்கும் திட்டம் - ஸ்டார்ஸ் தினம் மே 24- ம் தேதி காலை 10 மணிக்கு விஐடி வளாகத்தில் அண்ணா அரங்கத்தில் வேந்தர் கோ . விசுவநாதன் தலைமையில் நடைபெறுகிறது .              இதில் ராம்ராஜ் குழுமத்தின் தலைவர் கே . ஆர் . நாகராஜன் முதன்மை விருந்தினராக கலந்து கொள்கிறார் . தேனி தனிதுணை ஆட்சியர் ஜெ . கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் .          

• நறுவீ மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா.

Image
 

• சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் தேர் திருவிழா.

Image
·         சத்துவாச்சாரி புகழ்பெற்ற சாலை கெங்கையம்மன் தேர் திருவிழா.     ·         பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு.              வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள புகழ்பெற்ற சாலை கெங்கையம்மன் ஆலய தேர் திருவிழா நடைபெற்றது. இதில் கெங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களை செய்து மரத்தேரில் கெங்கையம்மனை வைத்து பல்வேறு மேளதாளங்கள் முழங்க பக்தி பரவசத்துடன் திரளான பக்தர்கள் வந்து தேரை வடம்பிடித்து இழுத்தனர்.       பக்தர்கள் தேரின் மீது பூக்கள், பழம், உப்பு, மிளகு ஆகியவைகளை வீசி எறிந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இளைஞர்களூம் மேளதாளங்கள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் திருவிழாவினை கொண்டாடினர்.  

• வேலூரில் ராஜீவ்காந்தி நினைவு நாள்.

Image
·          வேலூரில் ராஜீவ்காந்தி நினைவு நாள்.         முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவு நாளையொட்டி , வேலூரில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் ராஜீவ்காந்தி   திருவுருவ படத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வாஹித்பாஷா ,   காட்பாடி வடக்கு ஒன்றிய காங்கிரஸ் தலைவர் திருவலம் ஜே . கணேஷ் உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர் . பின்னர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் .  

• வேலூர் மாவட்ட அனைத்து துறை அலுவலர் ஆலோசனை கூட்டம்.

Image
·         வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில்   நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாக துறை, மருத்துவ துறை, வனத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பொதுப்பணி துறை, நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை, கூட்டுறவு துறை, வேளாண்மை துறை, பள்ளி மற்றும் உயர்க்கல்வி துறை, கால்நடை பராமரிப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, வணிக வரி துறை, சுற்றுலாத் துறை, நீர்வள துறை, இந்து சமய அறநிலைய துறை உள்ளிட்ட 55 துறைகள் சார்ந்த திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் தொடர்புடைய துறை அலுவலர்களின் மூலம் விளக்க...

• வேலூர் 10-ம் வகுப்பு 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பாராட்டு.

Image
·         வேலூர் மாவட்டத்தில் 2025-26- ம் கல்வி ஆண் டில் 10-ம் வகுப்பு பொது தேர்வில்   அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற 42 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் 475- க்கு மேல் மதிப்பெண் பெற்ற 110   மாணவ , மாணவிகளை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார். வேலூர் மாவட்டத்தில் 2025-26- ம் கல்வி ஆண் டில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்   100% தேர்ச்சி பெற்ற   42 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் 475- க்கு மேல் மதிப்பெண் பெற்ற 110 மாணவ , மாணவிகளை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்   வழங்கினார்.   வேலூர் மாவட்டத்தில் 2025-26 - ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொது தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி ப் பெறும் 42 பள்ளிகளில் 100% மாணவ , மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் . இந்த 42 பள்ளிகளை சார்ந்த தலைமை ஆசிரியர்களை மாவட்ட ஆட்சி...

• விபத்தில் மூளை சாவடைந்த நெடுஞ்சாலை துறை ஊழியர் உடல் உறுப்புகள் தானம்.

Image
 ·         விபத்தில் மூளை சாவடைந்த நெடுஞ்சாலை துறை ஊழியர்   உடல் உறுப்புகள் தானம் .       திருவண்ணாமலை , போளூரில் வசித்து வந்தவர் மதன்குமார் ( வயது 36) நெடுஞ்சாலை துறையில் தட்டச்சு பணியாளராக பணிபுரிந்து வந்தார் . அவர் கடந்த மே மாதம் 17 அன்று இரு சக்கர வாகனத்தில் பயணித்தபோது சறுக்கி விழுந்தார் .              பின்னர் ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுதாக்கில் உள்ள   சி . எம் . சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . சிகிச்சை பலனின்றி , மே 21 அன்று இரவு 7 மணிக்கு அவருக்கு மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார் . குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தின்படி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அதன்படி   ஒரு சிறுநீரகம் நாராயணி மருத்துவமனைக்கும், கல்லீரல் , சிறுநீரகம் , கண்கள்   ராணிப்பேட்டை சி . எம் . சி மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது.