Posts

Showing posts from September, 2025

பொய்கையில் வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் எம்.எல்.ஏ.,க்கள்

Image
 பொய்கையில் வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு   வேலூர், செப்.16-   வேலூர் அடுத்த பொய்கையில் வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழா, கிருஷ்ணர் ராதை சிலை திறப்பு விழா  நடந்தது. விழாவிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி தணிகாசலம் தலைமை தாங்கினார். ரஞ்சன் மஹால் உரிமையாளர் ரஞ்சன், ஜெயசித்ரா, டாக்டர் பிரேமிரஞ்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   வலம்புரி விநாயகருக்கு வேத மந்திரங்கள் முழங்க ஈஸ்வரன் கோயில் குருக்கள் ராமச்சந்திரன் மகா கும்பாபிஷேகத்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.   விழாவில் கவிஞர் ச.லக்குமிபதி கலந்துகொண்டு விநாயகர், கிருஷ்ணர் பெருமைகளை பற்றி பேசினார்.   விழாவில் வனதுர்கை அம்மா, வராகிதாசன், எம்.எல்.ஏ.,க்கள் ஏ.பி. நந்தகுமார், ப. கார்த்திகேயன், முன்னாள் மத்திய மந்திரி என்.டி. சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ., இளவழகன், வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் த.வேலழகன், தி.மு.க ஒன்றிய செயலாளர் குமாரபாண்டியன், வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் துணைத் தலைவர் ஜனார்த்தனன், பஸ் உரிமைய...