• எரிவாயு உருளை இருப்பு ஆலோசனை கூட்டம்.
· வேலூர் மாவட்டத்தில் எரிவாயு உருளை இருப்பு குறித்து எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது . வேலூர் மாவட்டத்தில் எரிவாயு உருளை இருப்பு குறித்து எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி , தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் மாவட்டத்தில் எரிவாயு உருளை போதிய அளவில் இருப்பு வைத்து , தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது . இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது - எரிவாயு உருளை இருப்பு விவரம் , விற்பனை விவரம் மற்றும் பதிவு விவரங்களை HPCL BPCL & IOCL ஆகிய எரிவாயு நிறுவனங்கள் தினமும் மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் . எரிவாயு உருளைகளை பதுக்கல் செய்வதோ அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதோ குற்றமாகும் . எனவே , சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கைகள் ...