• புனரமைக்கப்பட்ட மோர்தானா அணையின் இடதுபுற கால்வாய்.
· ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் குடியாத்தம் மற்றும் கீ. வ. குப்பம் வட்டத்தில் தூர்வாரி புனரமைக்கப்பட்ட மோர்தானா அணையின் இடதுபுற கால்வாயை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நீர்வள துறை அமைச்சர் அர்ப்பணித்தார். ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் குடியாத்தம் மற்றும் கீ. வ. குப்பம் வட்டத்தில் தூர்வாரி புனரமைக்கப்பட்ட மோர்தானா அணையின் இடதுபுற கால்வாயை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் கீ.வ குப்பம் ஊராட்சி ஒன்றியம் கீழ்முட்டுக்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அர்ப்பணித்தார். தூர்வாரி புனரமைக்கப்பட்ட மோர்தானா அணையின் இடதுபுற கால்வாய் விவரம் : வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் கீ.வ குப்பம் வட்டத்தில் உள்ள மோர்தானா அணையின் இடதுபுற கால்வாய் தொலைக்கல் 0 மீ முதல் 31840 மீட்டர் வரை தூர்வாரி புனரமைக்கும் பணிக்கு நபார்டு நிதி உதவியின் கீழ் ரூ. 2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மோர்தானா அணையின் இடதுபுற கால்...