• உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம்.
· தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை நீர்நிலைகளில் மீன்குஞ்சு இருப்பு செய்து உள்நாட்டு மீன்உற்பத்தியை அதிகரிக்கும் திட்ட த்தை வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் மூலம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை நீர் நிலைகளில் மீன் குஞ்சு இருப்பு செய்து உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் செயல்ப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஏரிகளில் மீன் குஞ்சு இருப்பு செய்யும் பணிகளை தொடங்கி வைக்கும் விதமாக காட்பாடி வட்டம், அம்முண்டி ஊராட்சியில் உள்ள சிவராமன்தாங்கல் ஏரியில் 10,000 எண்ணிக்கையிலான மீன் குஞ்சுகளை இருப்பு செய்தல் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்டத்தில் மீன் வளம் மற்...