• வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை.

·        வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை.

 வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.   01..10.2019 முதல் 31.12..2019  வரையான காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தற்போது ஐந்தாண்டுகள் முடிவு பெற்றுள்ள (மாற்றுத் திறனாளி ஒராண்டு முடிவு பெற்றுள்ள) பட்டப்படிப்பு,  மேல்நிலைக் கல்வி, பட்டயப் படிப்பு, எஸ்.எஸ்எல்.சி, மற்றும் பள்ளி இறுதித்தேர்வு தேர்ச்சி பெறாதவர்கள்   (முறையாகப் பள்ளியில் 9-வது வகுப்பு தேர்ச்சி பெற்று பின்னர் 10-வது பள்ளி இறுதி தேர்வில் கலந்து கொண்டு தோல்வியடைந்தவர்களாக இருந்தல் வேண்டும்) ஆகிய தகுதிகளை பதிவு செய்துள்ள இளைஞர்கள் நடப்புக் காலாண்டிற்கு உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க ஏதுவாக அச்சிட்ட விண்ணப்ப படிவங்களை வேலுார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் அல்லது இணைய தளத்தில் விண்ணப்பத்தினை www.tnvelaivaaippu.gov.in    or  https://tnvelaivaaippu.gov.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் கல்விச் சான்றுகள்,  வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை   (Smart Card)    மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள தேசீய மயமாக்கப்பட்ட வங்கியில் துவங்கப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் வேலை நாட்களில் நேரில் அலுவலகம் வந்து சமர்ப்பிக்கலாம்.

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வருவோர் கவனத்திற்கு

                மனுதாரர் அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் வாயிலாக எவ்வித ஊதியம் பெறுபவர் மற்றும் மகளீர் உரிமைத் தொகை, அரசு துறைகளில் உதவித்தொகை பெறுபவராக இருத்தல் கூடாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ / மாணவியராக இருத்தல் கூடாது.  இந்நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி கல்விக் கற்கும் மனுதாரருக்கு பொருந்தாது,

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வருவாய்த் துறையின் ஒட்டு மொத்த சான்றுடன் உதவித் தொகைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து ஒராண்டு கழித்து, இராண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தில்பணியில் இல்லை  என்ற சுய உறுதிமொழி படிவத்தை அளிக்க வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட சுய உறுதிமொழி படிவத்துடன் நாளது தேதி வரையிலும் புதுப்பித்தல் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை (Smart Card)  ஆதார் அட்டை (Aadhaar Card) வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம்  (முதல் பக்கம் மற்றும் முந்தைய ஆண்டு பெற்ற உதவித்தொகை பரிவர்த்தனையின் பக்கங்கள்) ஆகியவற்றின் போட்டோ நகல்கள் இணைக்கப்பட்டு நேரில் அல்லது அஞ்சல் மூலம் சமர்ப்பித்தல் வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்க தவறினால் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும்.

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும்.  அவ்வாறு புதுப்பித்தல் செய்த விவரத்தை தவறாமல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் பிரிவில் தெரிவிக்க வேண்டும்.  வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களின் உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும். வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதால் பதிவு ஏதும் ரத்தாகாது என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.