• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.
· வேலூரில் டெய்ட்கோ (TEIDCO FOUNDATION) ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.
· 40 அரங்குகளில் வர்த்தக கண்காட்சி, பாவலர் முகில் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சி - பல மாநிலங்களிலிருந்து பங்கேற்பு.
· டெய்ட்கோ வர்த்தக மையத்தை திறந்து வைத்து ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் எம்.பி. வாழ்த்துரை.
வேலூர் அடுத்த பொய்கையில், ரஞ்சன் மஹாலில் திறன்மிகு தொழில் முனைவோர் மற்றும் தொழில்துறை மேம்பாட்டு பேரவையின் (TEIDCO FOUNDATION) நான்காவது மாநில மாநாடு வெகு சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் நடைபெற்றது.
வேலூர் மண்டல தலைவர் மகாதினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தேசிய துணைதலைவர் மு.முத்துகுமாரசாமி அனைவரையும் வரவேற்றார்.
தேசிய துணைதலைவர் மு.அசோக்குமார், தேசிய துணைபொதுசெயலாளர் க.உஷாராணி, ஆலோசகர்கள் டாக்டர்.பி.ஆண்டப்பன், டாக்டர் ஜி.தியாகராஜன், டாக்டர்.பாரதிதாசன், சுரபி சங்கர், க.இளையனந்தன் சாக்யா, சி.சக்கரவர்த்தி, உ.குணா, எம்.தசரதன், லயன்.அமுதாமதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
TEIDCO நிறுவனரும் தேசிய தலைவருமான சு.சுந்தரவடிவேல் மாநாட்டின் நோக்கம், அமைப்பின் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார்.
வேலூர் மண்டலத்தின் சார்பில் தொடங்கப்பட்ட டெய்ட்கோ வர்த்தக மையத்தை டான்சி நிறுவனத்தின் முதன்மை செயலாளரும், நிர்வாக இயக்குனரும் மற்றும் முன்னாள் வேலூர் மாவட்ட ஆட்சியருமான, தர்மேந்திரபிரதாப்யாதவ்,ஐ.ஏ.எஸ். திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
மாநாட்டு விழா மலரை தாட்கோ மேலாண்மை இயக்குனர் கே.எஸ்.கந்தசாமி,ஐ.ஏ.எஸ். வெளியிட, முதல் பிரதியை இந்திய அரசு எம்.எஸ்.எம்.இ. இணை இயக்குனர் எஸ்.சுரேஷ் பாபுஜி, கர்நாடகா முன்னாள் பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் அனுமந்தையா, டிஐசிசிஐ தென்னிந்திய தலைவர் நல்ல.சௌந்தரராஜன், தென்னிந்திய துணைதலைவர் தினேஷ் எஸ்.சங்கர் ஆகியோர் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்தியன் ஆயில் பொது மேலாளர் (எம்&ஐ) டி.கே.இளமாறன், இந்திய வானூர்தி ஆணையம் இணைபொதுமேலாளர்(எ.டி.எம்) ஆர்.சேனாபதி, டிஐசிசிஐ தென்னிந்திய தலைவர் தினேஷ் எஸ்.சங்கர், தமிழ்நாடு மாநில தலைவர் கே.எஸ்.பாக்கியலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தேசிய, மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அமைப்பின் முன்னோடிகள், தொழில் முனைவோர், தொழில் ஆலோசகர்கள், தொழில்நுட்ப வல்லலுனர்கள் ஆகியோர் அவரவர் அனுபவங்களை குறித்து மாநாட்டில் உரையாற்றினர்.
டெய்ட்கோ ஃபவுண்டேஷன் தொழில் முனைவோர்கள் தங்களது விற்பனை பொருட்களை வர்த்தக கண்காட்சி அமைத்து 40 அரங்குகளில் காட்சிப்படுத்தி இருந்தனர்.
மாநாட்டில் டெய்ட்கோ மகளிர் அணியினர் சீருடையில் பங்கேற்று அவரவர் வர்த்தகம் சார்ந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.
பொய்கை, ஜெய்பீம் இரவுப் பள்ளி கூட்டமைப்பு பாவலர் முகில் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொழில் முனைவோர்கள் தங்களது நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் தொழில் சார்ந்த கருத்துக்களை திரையில் காணொளி மூலம் காட்சிப் படுத்தி விளக்கினார்கள்.
மாநாட்டில் 10 லட்சம் ரூபாய் வரையிலான தாட்கோ கடனுக்கு தாட்கோ நிர்வாகமே நேரடியாக கடன் வழங்க வேண்டும். தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மைய அலுவலகங்களில் பட்டியல் சமூகத்திற்கான வழிகாட்டுதல் மேசையை அமைக்க வேண்டும். தாட்கோவுக்கான தனி வங்கியை உருவாக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பாண்டிச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் பிரதிநிதிகள் மற்றும் தொழில் செய்ய ஆர்வமுள்ள இளைஞர்களும் திரளாக பங்கேற்றனர். தேசிய பொருளாளர் வசந்தாகோவிந்தன் நன்றி உரையாற்றிட நிகழ்ச்சி நிறைவடைந்தது. நிகழ்ச்சியை செல்வி.தமிழ்செல்வி, சீனிவாசன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
Comments
Post a Comment