• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.
· கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.
தவசி கீரை
உணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது, உடலுக்கு ஆரோக்கியம். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம். ரத்தசோகை பிரச்னைக்கும் சிறந்த தீர்வு தவசிகீரை தான்….
தவசி கீரை யாரும் கேள்விப்படாத ஒன்றாக கருதப்படலாம். இதில் அடங்கி இருக்கும் வைட்டமின்கள் நமக்கு கொடுக்கும் நலன்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
வைட்டமின் எ, வைட்டமின் பி , வைட்டமின் சி,வைட்டமின் கே போன்றவை அடங்கி உள்ளதால் இதை Multivitamin கீரை என்றும் அழைக்கின்றனர்….
ரத்தத்தில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும் மற்றும் கெட்ட ரத்தங்கள் வெளியேற்ற பட்டு ரத்தத்தை சுத்திகரித்து உற்பத்தி செய்யும்.
பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் காண படுகிறது .
ஆங்கிலத்தில் Chakurmanis என்று அழைக்கப்படும்….எளிதாக குச்சி வைத்தாலே நன்றாக வளர்ந்து விடும்…விதைகள் மூலமும் வளர்க்கலாம்…சிலர் தவசிகீரையும் தவசிமுருங்கையும் ஒன்று என்று கருதுகின்றனர்…ஆனால் இரண்டும் வேறு வேறு…இந்த கீரையை மாதம் ஓரீறு முறை எடுத்துக்கொண்டால் போதுமானது
முடக்கத்தான் கீரை
முடக்கத்தான் என்பது கீரை கொடி வகையைச் சேர்ந்தது. உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதால் முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் பெற்றது. முடக்கறுத்தான்பேச்சு வழக்கில் முடக்கத்தான் ஆனது. இந்த முடக்கற்றான் மூலிகை வாயு பகவானின் மூலிகை எனப்படுகிறது. இதனால் வாய்வு தொல்லைகளுக்கு அருமருந்தாகும். முடக்கத்தான் இலைமற்றும் வேர் இரண்டும் ஏராளமான மருத்துவப் பலன்களைக் கொண்டவை.
முடக்கத்தான் கீரை பயன்கள்
முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.
முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகின்றன.
முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உணவுடன் உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும்.
முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
முடக்கத்தான் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி அகலும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.
முடக்கத்தான் கீரையை வாய்வு பிரச்சனையால் அவதிபடுபவர்கள்சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை மிகவும் நல்லது. ஒரு மேஜைக்கரண்டி முடக்கத்தான் கீரை சாறு பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும்.
இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.
முடக்கத்தான் கீரையானது முதுகு எலும்பு தேய்மானம், பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் குணப்படுத்தும்.
இதை ஆரம்பத்தில் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு ஒரு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம். மூளைக்கு பலம் தரும்.
முடக்கத்தான் கீரையின் துவையலை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.
அம்மான் பச்சரிசி
அம்மான் பச்சரிசி பெரும்பாலும் ஈரமாக உள்ள எல்லா இடங்களிலும் காணப்படும். மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இவை பயன்படுத்தப்படுகிறது.
அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.
சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் இருக்கும். இவர்கள் தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.
அம்மான் பச்சரிசி இலைகளை எடுத்து சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும்.
உடலில் கொப்புளங்கள் வீக்கம் இருந்தால் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதன் மீது பற்று போட்டால் கொப்புளங்கள் வீக்கங்கள் குணமாகும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும் .
அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.
அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.
காசினிக் கீரை
காணாம் கோழிக் கீரை என்ற பெயர்தான் மருவி காசினி கீரை ஆனது. இது புளிச்ச கீரை வகையை சேர்ந்த கீரையாகும். காசினிக் கீரையின் தாவரவியல் பெயர்’சிக்கோரியம் இன்டிபஸ்’[Chicorium intybus] என்பதாகும். காபி பொடியில் கலப்பார்களே ‘சிக்கரி, அது இந்த செடியில் இருந்து தான் எடுக்கப்படுகிறது
காசினி கீரையில் இரும்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சத்துகளான ஏ, பி, சி, போன்றவை நிறைந்து உள்ளது. காசினி கீரை அதிக உயிர்ச்சத்து கொண்டதாகும். காசினி கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துகொள்வது மிகவும் நல்லது.
காசினி கீரையானது ஜீரண கோளாறு, பித்தப்பை, ரத்த சோகை, கல்லீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள், இருதய நோய்களை குணபடுத்தும் தன்மை கொண்டது.
உடலில் எந்த இடத்தில் வீக்கம் எற்பட்டிருந்தலும் அவ்வீக்கத்தை குணப்படுத்தும் குணம் கொண்டது காசினி கீரை.
காசினி; கீரை சிறுநீரகத்தை சுத்திகரித்து நன்கு செயல்பட வைக்கும்.
காசினி கீரையை உண்டு வந்தால் பற்கள் சம்பந்தமான எந்த பிரச்சனையும் உங்களை அண்டாது.
உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலை குண்டாவதில் இருந்து பாதுகாக்கிறது.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், அதிக உதிரப்போக்கு இவற்றில் இருந்து நிவாரணம் பெற காசினிக் கீரையை உலர்த்தி பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டுவர வெள்ளைபடுதல் நோய் குணமாகும். காசினிக் கீரையை கடைந்து மதிய உணவில் வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப்போக்கு குறையும்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புண்கள் ஏற்பட்டால் அவ்வளவு எளிதில் ஆறாது. இதற்கு காசினிக் கீரையை நன்கு அரைத்து புண்ணின் மேல் பற்று போல போட்டு கட்டினால் விரைவில் புண்கள் ஆறிவிடும். இந்த கீரையின் வேர் காய்ச்சலை குணமாக்கி உடலுக்கு அதிக வலுவை கொடுக்கும்.





Comments
Post a Comment