• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

 ·         வேலூர் வாசகர் வட்டம் சார்பில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் 94-வது பிறந்த நாள் விழா.

·         பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வேலூர் மாமன்ற உறுப்பினர் பாபிகதிரவன் பரிசு வழங்கி பாராட்டு.

·         அப்துல்கலாம் திருஉருவப் படம் வழங்கி கவிஞர் முனைவர் ச.இலக்குமிபதி புகழாரம்.

      டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம்-ன் 94-வது பிறந்த நாள் விழா வேலூர் வாசகர் வட்டம் சார்பில் வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் வெகு சிறப்பாக, உற்சாகமாக, மாணவர்களுடன் கொண்டாடப்பட்டது. விழாவில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் திருஉருவப் படத்தை, பள்ளி தலைமை ஆசிரியரிடம் கவிஞர் முனைவர் ச.இலக்குமிபதி வழங்கினார்.

      டாக்டர் ஏபிஜே. அப்துல்கலாம் இந்தியாவின் 11-ஆவது ஜனாதிபதி.  ராமேஸ்வரத்தில் பிறந்தவர். டாக்டர் அப்துல்கலாம் சிறந்த கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், விஞ்ஞானி, ஆசிரியர்.  பொக்ராணில் அணுகுண்டு வெடிப்பதற்கு காரணமாய் இருந்தவர். ஏவுகணை நாயகன். அவரது புகழ் பெற்ற புத்தகம் அக்னிச் சிறகுகள்.

      “கனவு காணுங்கள்” அவரது புகழ் பெற்ற அறிவுரை. கிளி வளர்த்தேன் பறந்து விட்டது. அணில் வளர்த்தேன் ஓடிவிட்டது. மரம் வளர்த்தேன் இரண்டும் வந்து விட்டது என்ற அப்துல்கலாம் கூற்றை கவிஞர் முனைவர் ச.இலக்குமிபதி நினைவு கூர்ந்தார்.     

      மேலும் டாக்டர் அப்துல்கலாமின் எளிய வாழ்க்கை நடைமுறைகள், மாணவர்களிடம் அவர் கொண்டிருந்த அன்பு, அவரிடம் இருந்த நாட்டுப்பற்று, எண்ணற்ற நற்பண்புகள், சிந்தனைகள் நாம் என்றுமே மறக்க முடியாது என்று ஏராளமானவைகளை அடிக்கடி எடுத்துரைத்து கவிஞர் முனைவர் இலக்குமிபதி அனைவரையும் சிந்திக்க வைத்தார்.

      தொடர்ந்து மாணவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சியின் முக்கியத்துவம், யோகா மற்றும் மூச்சு பயிற்சி பற்றிய செய்முறை பயிற்சியும் மேடையில் செய்து காட்டப்பட்டது.

      “இவரைப் போல் யார்” என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி வேலூர் மாமன்ற உறுப்பினர் பாபிகதிரவன் வாழ்த்துரை வழங்கினார்.

      இந்நிகழ்ச்சியில் கவிஞர் பேராசிரியர் பொன்.செல்வகுமார், கவிஞர் நல்லாசிரியர் ஜோசப்அன்னையா, நல்நூலகர் ஜே.ரவி ஆகியோர் அப்துல்கலாமின் பெருமைகளை சிறப்பாக எடுத்து கூறினர்.

 

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சி அங்கீகாரம்.

• மாணவர்களுக்கு உணவின் முக்கியத்துவம் குறித்து வேளாண் சுற்றுலா.