- பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லூரியில், அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
காஞ்சிபுரம், ஊவேரியில் செயல்படும் பி.டிலீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 1300-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதிமற்றும் காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தென்னிந்தியாவின் முதல் தொழில்கல்வி நிறுவனத்தை தொடங்கிய பெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை, சென்னை வேப்பேரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, இவ்வறக்கட்டளையின் நிறுவனர் பெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் (1829-1874) தனது பெருமதிப்பு மிக்க சொத்து அனைத்தையும் ஏழை எளிய மக்களின் கல்வி வளர்ச்சிக்காக பயன்படும் பொருட்டு, விருப்பாவணம் எனும் உயில் எழுதி வைத்தார். அதன் அடிப்படையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு உயர் கல்வியை, குறிப்பாக தொழிற் கல்வியை அளித்து வருகிறது. காஞ்சிபுரம் - அரக்கோணம் பிரதான சாலையில் ஊவேரி எனும் கிராமத்தில் பெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, 2001-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. 100% மாணவர் சேர்க்கையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும், இக்கல்லூரியில், அறக்கட்டளையின் மாண்பமைத் தலைவர் நீதியரசர் பொன்.கலையரசன் அவர்களின் அறிவுறுத்தலோடு பல்வேறு பாட இணை செயல்களும், சமுதாயப் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. காஞ்சிபுரம் மாவட்டக் கல்விகத் துறையோடு இணைந்து பெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியினை டிசம்பர்-6, சனிக்கிழமை அன்று மாபெரும் அளவில் நடத்தியது. இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவர் மாண்பமை நீதியரசர் பொன். கலையரசன் அவர்களும், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் டாக்டர் அ. நளினி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இந்நிகழ்வில் பெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் திருமதி ரேணுகா, டாக்டர் அரிஸ்டாட்டில், தொழில்நுட்ப ஆலோசகர் திரு. ஜெகநாதன், கல்லூரி இயக்குனர் டாக்டர் அருளரசு, கல்லூரி முதல்வர் டாக்டர் பழனிசாமி, துணை முதல்வர் டாக்டர் பூபதி ஆகியோர்களும், மாவட்டக் கல்வி அலுவலர் வி காந்திராஜன், அரசுப் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், திரு. சுந்தரராஜன், திரு. பொய்யாமொழி, திரு. தனசேகரன், திரு. சங்கர், திரு. ஆனந்தகுமார், திருமதி. ஹேமலதா மற்றும் திருமதி. ருக்மணி உள்ளிட்ட, 70-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி பட்டறையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு, உதவி பெறும் மற்றும் நலவாரியம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட மேனிலைப்பள்ளிகளில் இருந்து, 1300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு உயர்கல்வி வழிகாட்டி குறித்தான பயிற்சி பட்டறையின் வழியே பயன் பெற்றனர். இந்நிகழ்வில் கோயம்புத்தூர் மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து வருகை புரிந்த உயர்கல்வி வழிகாட்டி வல்லுனர்கள் பங்கேற்று மாணவர்களின் ஐயங்களை களைந்து தெளிவுறுத்தினர். இவர்களோடு ஒவ்வொரு பாடத்திற்கும், கருத்தாளர்களாக அரசு மேல்நிலைப் பள்ளிகளின் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டு தனது ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் மாணவர்களுக்கு வழங்கினர். கல்லூரியின் சார்பாக அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தேர்வுக்கு பயன்படும் கையேடு மற்றும் கோப்புகள் வழங்கப்பட்டன. மதிய உணவும் பரிமாறப்பட்டது. இந்நிகழ்வினை இணைப் பேராசிரியர் டாக்டர் பாலகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார், இணை ஒருங்கிணைப்பாளர்களாக, டாக்டர் சுரேஷ்குமார், முரளி கிருஷ்ணன், அன்புமணி ஆகிய பேராசிரியர்கள் செயல்பட்டனர். துறைத் தலைவர்கள் டாக்டர் ஞானசேகரன், டாக்டர் கார்த்திகேயன், டாக்டர் வெங்கடேசன், திரு.கமலநாதன் மற்றும் அனைத்துத் துறை பேராசிரியர்கள், ஆசிரியர் அல்ல பணியாளர்கள், தன்னார்வ மாணவர்கள் என பெருந்திரளாக இந்நிகழ்வில் கலந்துகொண்டு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி விழா சிறப்பாக நடைபெற துணை நின்றனர். |
Comments
Post a Comment