• அடுக்கம்பாறையில் நர்வம் கிட்ஸ் மழலையர் பள்ளி .
· அடுக்கம்பாறையில் நர்வம் கிட்ஸ் மழலையர் பள்ளி - அன்னை மிரா கல்லூரி தலைவர் ராமதாஸ் திறந்து வைத்தார்
வேலூர் அடுத்த அடுக்கம்பாறையில் நர்வம் கிட்ஸ் மழலையர் பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நர்வம் குழுமத் தலைவர் ரமேஷ் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். சந்திரன், அன்பழகன், தசரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நர்வம் கிட்ஸ் பள்ளி இயக்குனர் ஜனனி ரமேஷ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக அன்னை மிரா பொறியியல் கல்லூரி தலைவர் எஸ்.ராமதாஸ் கலந்து கொண்டு பள்ளியை திறந்து வைத்து பேசினார். அன்னை மிரா பொறியியல் கல்லூரி செயலாளர் ஜி.தாமோதரன், லாங்குவேஜ் பில்லர் உரிமையாளர் ராகுல், டைம் கிட்ஸ் மேலாளர் ஜெயராஜ், தர்மா பில்டர்ஸ் உரிமையாளர் ஞானவேல் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து பேசினர்.
விழாவில் சி.எம்.சி. ஜேம்ஸ் தேவகுமார், விஜயகுமார், மாயா கால் டாக்ஸி உரிமையாளர் ராஜேஷ், பாரத ஸ்டேட் வங்கி பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆசிரியை ரம்யா நன்றி கூறினார்.

Comments
Post a Comment