• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.
· பெ.தெ.லீ. செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல் துறையின் “மெக்கத்லான் 2024” தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கு.
· மாநிலம் முழுவதிலுமிருந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு.
சென்னை, வேப்பேரியிலுள்ள பெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல் துறை சார்பாக, “மெக்கத்லான் 2024” (MECHATHLON-2024) என்ற தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு இன்று நடைபெற்றது.
மாநிலம் முழுவதிலுமிருந்து 20 பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த 85 மாணவர்கள் பல்வேறு தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத போட்டி நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கல்லூரியின் முதல்வர் முனைவர்.எம்.வெங்கடராமன் வரவேற்புரை ஆற்றினார்.
இயந்திரவியல் துறை தலைவர் எஸ்.சரவணன் கருத்தரங்கு பற்றி மாணவர்களிடையே விளக்க உரையாற்றினார்.
கல்லூரியின் இயக்குனர் முனைவர்.எம்.அருளரசு சிறப்புரையாற்றினார்.
பெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் எச்.வெங்கடேஷ் மற்றும் முனைவர்.பி.அரிஸ்டாட்டில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.
அறக்கட்டளையின் செயலாளர் எம்.சாம்பசிவம் (முன்னாள் மாவட்ட நீதிபதி) கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கி ஊக்குவித்தார்.
M/s.INTELIZEST நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் அசோக்ராஜ்வடிவேல் நிறைவுரையாற்றி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த தொழில்நுட்ப கருத்தரங்கு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.
Comments
Post a Comment