• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

·         வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு மற்றும் டெட்க்கோ ஃபவுண்டேஷன் இணைந்து  "ஐம்பெரும் விழா”.

·         பொருளாதார திட்ட உதவி ரூ.11 லட்சம் கடனுதவி காசோலை வழங்கல்.

     வேலூர் பொய்கை ஆதி பகவன் புத்தர் அறிவாலயத்தில் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு மற்றும் வேலூர் மண்டலம், டெட்க்கோ ஃபவுண்டேஷன், இணைந்து "ஐம்பெரும் விழா” வெகு விமரிசையாக நடைபெற்றது.

     வேலூர் பொய்கை ஆதி பகவன் புத்தர் அறிவாலயத்தில் நடந்த "ஐம்பெரும் விழாவில்" டெட்க்கோ ஃபவுண்டேஷன் நிறுவனரும், தேசிய தலைவருமான சு.சுந்தரவடிவேல், தேசிய பொதுச் செயலாளர் பெ.சந்திரன், தேசிய துணை தலைவர் மு.முத்துகுமாரசாமி மற்றும் வேலூர் மண்டல நிர்வாகிகள், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும்  பங்கேற்று சிறப்பித்தனர்.

     விழாவில் அண்ணல் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு சென்னை கற்பி பாஸ்கர் மாலை அணிவித்து, மும்மணிகளை முன்னிறுத்தம் 3 திருவிளக்குகளை பாவலர் முகில் கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் செல்வன் சி.சீனிவாசன் சுடரேற்றி வைத்தார்.

    ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பின் காப்பாளர் அரக்கோணம் கோவி.பார்த்திபன், ஜெய்பீம் இரவுபள்ளி கூட்டமைப்பின் தன்னார்வலர்கள் இணைந்து புத்த வந்தனம் செய்தார்கள்.

     நிகழ்ச்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கி.மு.அருந்ததிதிராவிடமணி தலைமையில் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் வி.பிரபாகரன் வரவேற்புரை ஆற்றி தொடங்கி வைத்து விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார்.        

                *முதல் விழாவாக, ஆதி பகவன் புத்தர் அறிவாலயம் ஓராண்டு நிறைவு விழாவை யொட்டி நிறுவனர் மகா.தினகரன் புத்தர் அறிவாலயம் தொடங்கிய நாள் முதல் இன்றைய நாள் வரை அனைத்து நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார்.

     பௌத்தம் எப்படி மறைக்கப்பட்டது என்பதை, "பண்டிதர் அயோத்திதாசர் பார்வையில் மறைக்கப்பட்ட பௌத்தம்" என்ற தலைப்பில் தூய நெஞ்ச கல்லூரி தமிழ் துறைத் தலைவர் (ஓய்வு) பேராசிரியர். முனைவர். பொன்செல்வகுமார் உரையாற்றினார்.

     இரண்டாம் விழாவாக, ஜெய் பீம் பொருளாதார திட்டம் மூன்றாம் ஆண்டு துவக்க விழா ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு வழங்கும் பொருளாதார திட்ட உதவியை, டெய்ட்கோ பவுண்டேஷன் நிறுவன தலைவர் சு.சுந்தரவடிவேல் பயனாளர்களுக்கு 11 லட்சம் ரூபாய்க்கான கடனுதவி காசோலையை வழங்கினார்.

     வேலூர் மண்டல டெய்ட்கோ பவுண்டேஷன் சார்பில் 7 நபர்களுக்கு MSME சான்றிதழும், பெட்டிக்கடை வைப்பதற்கு திலகவதி என்பவருக்கு ரூ.5,000/- ரொக்கம், ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பின் நிதி உதவியாக வழங்கி சிறப்புரையாற்றினார்.

     பொருளாதாரத்தில் மேம்பட என்ன தொழில் செய்யலாம், எப்படி வணிகம் செய்து வருமானத்தை ஈட்டுவது குறித்து புதிய தொழில் முனைவோருக்கான ஆலோசனை வழிகாட்டியை மிக விளக்கமாகவும், தெளிவாகவும், சென்னை சேர்ந்த கார்ப்பரேட் பயிற்சியாளர் அனுபவமிக்க லயன் அமுதாமதியழகன் திறம்பட எல்லோருக்கும் வகையில் புரியும் எளிமையாக விளக்கி பேசினார்.

     தொடர்ந்து தேசிய பொதுச்செயலாளர் பெ.சந்திரன், துணைத்தலைவர் மு.முத்துகுமாரசாமி வாழ்த்துரை வழங்கினர்.

     மூன்றாவது விழாவாக புத்தகத்தை வாசிக்கவும், எழுதும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் மறைக்கப்பட்ட உண்மையான வரலாறுகளை வெளிக்கொண்டு வரும் வகையில் முதற்கட்டமாக, முயற்சியாக "புத்தகம் வெளியீட்டு விழா" ஜெய்பீம் இரவுப் பள்ளி கூட்டமைப்பின் கௌரவ தலைவரும் ஆயருமான முனைவர். ஐசக் கதிர்வேலு தலைமையில்,

1. சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான முனைவர் .ஜா. இன்பகுமார் எழுதிய "இந்த கவிதையை எரிக்கச் சொல்லுங்கள்",

2. சமூக ஆர்வலரும், ஆய்வாளருமான சிந்து சீனு எழுதிய "டாக்டர் அம்பேத்கர் நகர்"

3. ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பின் நிறுவனரும் பௌத்த நெறியாளருமான மகா.தினகரன் தொகுத்து வழங்கிய “இந்திய நலனில் டாக்டர் பாபாசாகேப்"

4. வேலூர், ஆயுள் காப்பீட்டு துறையின் வளர்ச்சி அதிகாரி யு.லோகேஷ் எழுதிய "சாளரத்தின் வெளியே அக்கீரா"

ஆகிய நான்கு நூல்களும் வெளியிடப்பட்டு நூல்களை அறிமுகம் செய்து நூல் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசும், பாராட்டும் வழங்கப்பட்டது.

     நான்காம் விழாவாக, பணி ஓய்வு பாராட்டு விழாவில்....

     வேலூர், பொதுக் காப்பீட்டு துறை, அரப்பாக்கம் S.இராஜா, நல்லாசிரியர் விருது பெற்ற உ.சாந்தி உத்தமன், தலைமையாசிரியர், வேலூர், டெய்ட்கோ பவுண்டேஷனின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டெய்ட்கோ பவுண்டேஷனுக்கு பேருதவியாக இருந்த அரசு ஊழியர்கள் எவ்வாறு நலிந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்பதில் முன் உதாரணமாக செயல்பட்ட சிறப்பாக அரசு பணிபுரிந்து வந்த S.மணிமேகலை, தாட்கோ மேலாளர், கடலூர், ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

       2023-24 கல்வி ஆண்டில் 10, 11, 12-ஆம் வகுப்புகளில் பயின்ற மாணாக்கர்களை 100% தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்களுக்கு டாக்டர் நா.உத்தமன், கு.விஜயகுமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கினார்கள்.

     ஐந்தாவது விழாவாக, ஜெய்பீம் இலவச இரவு பள்ளி கூட்டமைப்பில் பயிலும் மாணாக்கர்கள் அனைவருக்கும் 2024-25-ஆம் ஆண்டுக்கான நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழாவில் வேலூர் பொய்கை தொழிலதிபர் ரஞ்சன் நோட்டு புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

     ஐம்பெரும் விழா சிறப்பாக நடைபெறுவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றி, பேருதவியாக இருந்த ஜெய்பீம் இரவுப்பள்ளி கூட்டமைப்பின் தன்னார்வலர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டார்கள்.

     விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறப்பாக தொகுத்து வழங்கிய செல்வி. இரா. தமிழ்ச்செல்வி, செல்வி. வெ. ஸ்ரீஜா மற்றும் விழாவில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும், பாவலர் முகில் கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் செல்வன்.சி.சீனிவாசன் நன்றியுரையுடன் ஐம்பெரும் விழா நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

     இதுபோன்ற ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அனைவரும் தொடர்ந்து தங்கள் மேலான ஒத்துழைப்பை நல்கி ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்குமாறு ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பின் நிறுவனரும் பௌத்த நெறியாளருமான மகா.தினகரன் கேட்டுக் கொள்கின்றோம் என்றார். மேலும் பல்வேறு கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்று மனநெகிழ்ச்சியுடன் உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்.

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.