• குடியாத்தம் மதுபான கடை மூட வைக்க உத்தரவு.
- குடியாத்தம் மதுபான கடை மூட வைக்க உத்தரவு.
தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான சில்லறை கடைகளான குடியாத்தம் வட்டத்தில் அமைந்துள்ள கடை எண்.11038 மற்றும் கடை எண்.11033 ஆகிய மதுபான கடைகள் 15.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் சிரசு ஊர்வல திருவிழா என்பதால், அன்றைய தினத்தில் மதுபான கடைகளை மூடி வைக்க வேண்டும் என சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் சிரசு ஊர்வல திருவிழா தினமான 15.05.2026 அன்று ஒருநாள் மட்டும் குடியாத்தம் வட்டத்தில் அமைந்துள்ள 2 மதுபான கடைகளான கடை எண்.11038 மற்றும் கடை எண்.11033 டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மூடப்படும் எனவும், அன்றை தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி தினத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்மந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்குச்சட்டம் 1937 மற்றும் சம்மந்தப்பட்ட இதர விதிகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அதேபோல் அன்றைய தினத்தில் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிய வந்தாலும் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை இரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மதுக்கூட உரிமதாரர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment