• எஸ்ஆர்எம்-ல் தமிழ்ப்பேராயம் சார்பில் தமிழ் வளர்ச்சியில் வைணவத்தின் பங்கு பற்றிய தேசிய கருத்தரங்கம் - புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கினார்
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராயம் சார்பில் தமிழ் வளர்ச்சியில் வைணவத்தின் பங்கு பற்றிய ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது . இதனை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் வேந்தர் டாக்டர் தா . இரா . பாரிவேந்தர் எம் . பி . தலைமையில் புதுச்சேரி மாநில பொதுப்பணி துறை அமைச்சர் க . லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்தார் . தமிழ் வளர்ச்சியில் சமயங்களுக்கு பெரும் பங்கு உள்ளது . சைவ சமயத்தைச் சேர்ந்த நாயன்மார்களும் , வைணவ சமயத்தைச் சேர்ந்த ஆழ்வார்களும் அருளிய பாசுரங்கள் தமிழ் மொழியின் பொக்கிஷங்களாக போற்றப்படுகின்றன . அவர்களின் அரிய தமிழ் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயம் சார்பில் கடந்தாண்டு தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்களின் பங்கு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடத்தப்பட்டது . இவ்வாண்டு தமிழ் வளர்ச்சியில் வைணவத்தின் பங்கு என்பது பற்றிய தேசிய கருத்தரங்கம் நடத்தப்பட்டது . செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவிய