வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும்
· மார்ச் மாதம் முதல் ஜுன் மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால் வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சித் தலைவர் . தமிழ்நாட்டில் 2024- ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜுன் மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் 16.03.2024 அன்று நாளிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது . இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை ப் பாதுகாத்து கொள்ள பின்வரும் வழிமுறைகளை ப் பின்பற்ற வேண்டும் . · பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் குறிப்பாக நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை வெளியே செல்வ தைத் தவிர்க்க வேண்டும் . · ...