வேலூர் மாவட்டத்தில் 1060 இடங்களில் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள் அகற்றம்

·         பாராளுமன்ற  பொதுத்தேர்தல் 2024     முன்னிட்டு  வேலூர் மாவட்டத்தில் 1060 இடங்களில்  சுவர் விளம்பரங்கள்,  சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள்  அகற்றப்பட்டு, 19 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற  பொதுத்தேர்தல் 2024 -ஐ   முன்னிட்டு  தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் அரசு மற்றும் பொதுக்கட்டடங்கள், தனியார் இடங்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும்   ஊராட்சி பணியாளர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை அரசு மற்றும் பொது  இடங்களில் 982 இடங்களிலும் தனியார் இடங்களில் 78 இடங்களிலும் என மொத்தம் 1060 இடங்களில் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட  பகுதிகளில் விளம்பரங்கள் மேற்கொண்டது தொடர்பாக காவல் நிலையங்களில் 19 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

                எனவே, வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி விளம்பரங்களை மேற்கொள்ளும் நபர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.

 

 

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.