காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
· நந்தன் கால்வாய் திட்டம் நிறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - பணிகள் இந்த ஆண்டே முடியும் - காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி. வேலூர் மாவட்டம் , காட்பாடியில் உள்ள காங்கேயநல்லூரில் உள்ள ஆன்மிக சொற்பொழிவாளர் திருமுருக கிருபானந்த வாரியார் ஞானவளாகத்தில் அவரின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடபடுகிறது. இதனை முன்னிட்டு அவரின் திருஉருவ சிலைக்கு தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி , வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் , சட்டமன்ற உறுப்பினர் அமுலு , பகுதி செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகள் சரியாக அகற்றவில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் ...