காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

 ·         நந்தன் கால்வாய் திட்டம் நிறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - பணிகள் இந்த ஆண்டே முடியும் - காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

       வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள காங்கேயநல்லூரில் உள்ள ஆன்மிக சொற்பொழிவாளர் திருமுருக கிருபானந்த வாரியார் ஞானவளாகத்தில் அவரின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடபடுகிறது. இதனை முன்னிட்டு அவரின் திருஉருவ சிலைக்கு தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு  லெட்சுமி, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர் அமுலு, பகுதி செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர்   மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

     நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகள் சரியாக அகற்றவில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஆக்கிரமிப்புகளை அகற்றிகொண்டுதான் இருக்கிறோம். ஆனால் மறுபடியும் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். பல்வேறு குறுக்கீடுகள் எங்களுக்கு. வீடு கட்ட வேறு இடம் இல்லை மாற்று இடம் தாருங்கள் என்று சொல்கிறார்கள். சில இடங்களில் பள்ளி கூடங்களையே நீர் நிலைகளில் கட்டியுள்ளனர். நீர் வளத்துறையில் போதுமான அதிகாரிகளும் இல்லை. எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்து கொண்டுதான் உள்ளோம்.

     மேகதாது குறித்து சொல்லி சொல்லி அலுத்துவிட்டோம். கர்நாடகாவினர் அரசியல் பேசுகின்றனர். நந்தன் கால்வாய் இந்த ஆண்டு முழுமை பெறும். தனி கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. நிறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.   தேவகவுடா பேச்சுவார்த்தை மூலம் மேகதாது அணை விவகாரம் தீர்க்கப்படும் என சொல்வது, ஆதியிலிருந்து நல்ல எண்ணம் இல்லாதவர் தேவகவுடா. அவருடன் நான் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளேன். தமிழகத்தின்  மீது நல்ல எண்ணம் இல்லாதவர் அவர்.

      நடிகர் ரஜினிகாந்த் பழையவர்களை வைத்துகொண்டு முதல்வர் மிகவும் சிரமப்படுவதாக பேசியது குறித்து கேட்டபோது, அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், மூத்த நடிகரெல்லாம்  வயதாகி போய் பல் விழுந்து தாடி வளர்த்து சாகிற நிலையில் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என கூறினார்.

பேட்டி: துரைமுருகன் (தமிழக நீர் வளத்துறை அமைச்சர்).

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.