• நான் முதல்வன் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையம்.
· தமிழ்நாடு துணைமுதலமைச்சர் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் இளைஞர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் விதமாக நான் முதல்வன் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து , வேலூர் மாவட்டம் , வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள நான் முதல்வன் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையத்தை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார். தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்கால வாழ்வினை கருத்தில் கொண்டு அவர்களின் வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்தும் பொருட்டு இளைஞர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் விதமாக நான் முதல்வன் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையங்களை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். தமிழ்நாட...