• வேலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தினம்.
· வேலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தினம் - 106 சிறுபான்மையினர்களுக்கு ரூ.10.37 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் சிறு தொழில் செய்வதற்கு 106 சிறுபான்மையினர்களுக்கு ரூ.10.37 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் (ம) பணியாளர்கள் நலவாரியத்தின் மூலம் 05 நபர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது,
மதவழி சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பாரசீகர்கள் மற்றும் ஜெயின் மதத்தினர் ஆகியோர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் சிறுபான்மையினருக்கான பல்வேறு நலத்திட்டங்களை சென்றடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் 2013-ஆம் ஆண்டு முதல் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 18-ஆம் நாள் கொண்டாடப்பட்டுவருகிறது.
நம்முடைய வேலூர் மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 சதவீத மக்கள் சிறுபான்மையினர் வசித்து வருகின்றனர். அரசின் சார்பில் சிறுபான்மை இன மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 என கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இஸ்லாமியர்களின் பள்ளி வாசல்கள், தர்காக்கள், அனாதை இல்லங்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் பணியாளர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலைகளின் மேம்பாட்டிற்காக உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நல வாரியத்தில் வேலூர் மாவட்டத்தில் 957 பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, கண் கண்ணாடி செலவுத் தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை என பல்வேறு நலத்திட்ட உதவிகளின்கீழ் 396 பயனாளிகளுக்கு ரூபாய் 8.82 இலட்சம் உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதுவரை 43 உறுப்பினர்கள் ரூபாய் 14.09 இலட்சம் மதிப்பிலான முதியோர் ஓய்வூதியம் பெற்றுள்ளனர்.
வக்ஃப் நிறுவனங்களில் பணிபுரியும் உலமா பணியாளர்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 2022-ஆம் ஆண்டு முதல் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 12 பயனாளிகள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு தலா ரூபாய் 25,000/-விதம் 3 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டு அவர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இந்நல வாரியத்தின்கீழ் இதுவரை 128 பணியாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை 2057 பயனாளிகளுக்கு ரூபாய்1.11கோடிமதிப்பில்சிறுதொழில்புரியஉதவித்தொகை,கல்வித்தொகை,மருத்துவசெலவுக்கானஉதவித்தொகைமற்றும்விலையில்லாதையல்இயந்திரங்கள்எனநலத்திட்டஉதவிகள்வழங்கப்பட்டுள்ளன. இதேபோன்றுகிறிஸ்தவமகளிர்உதவும்சங்கத்தின்மூலம்84பயனாளிகளுக்குரூபாய்8.28இலட்சம்மதிப்பில்நலத்திட்டஉதவிகள்வழங்கப்பட்டுள்ளன.
மேலும்அரசின்சார்பில்சிறுபான்மையினருக்குமின்மோட்டாருடன்கூடியவிலையில்லாதையல்இயந்திரங்கள்வழங்கப்பட்டுவருகிறது.கிறிஸ்தவதேவாலயம்புனரமைப்புசெய்வதற்காகநிதிஉதவிவழங்கப்படுகிறது.கபர்ஸ்தான்மற்றும்கல்லறைதோட்டங்கள்அமைக்கவும்உரியஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டுசிறுபான்மையினர்நலத்துறைஇயக்ககத்திற்குஅனுப்பப்பட்டுள்ளது. மேலும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தினரின் இறந்த உடலை அடக்கம் செய்யும் இடமான கபர்ஸ்தான் மற்றும் கல்லறை தோட்டங்களுக்கு புதிய சுற்றுலா அமைத்து தருதல், பழுதடைந்த சுற்றுச்சுவரை சீரமைத்தல், பாதை அமைத்தல் மற்றும் பாதை புனரமைத்தல் திட்டம் 2023-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிறிஸ்தவ மக்கள் ஜெருசலம் புனித பயணம் மேற்கொள்ள மானியம் வழங்கப்பட்டிருக்கிறது. பிரதம மந்திரியின் சிறுபான்மையினருக்கான மக்கள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பேர்ணாம்பட்டு நகராட்சியில் அரசு மருத்துவமனையில் ரூ.7.59 கோடி மதிப்பில் புற நோயாளிகள் பிரிவு கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் 2.24 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. பேரணாம்பட்டு வட்டத்தில் ரூபாய் 1.09 கோடி மதிப்பில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலூர் பெண்ட்லேன்ட் அரசு மருத்துவமனையானது ரூ.197.81 கோடி மதிப்பில் பன்னோக்கு மருத்துவமனையாக கட்டப்பட்டு வருகிறது.
டாம்கோ எனப்படும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தால் தனிநபர் கடன் சிறு கடன், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 2023- 24-ஆம் தேதி ஆண்டில் 13 தனி நபர்களுக்கும், 10 மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் ரூ.1.18 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு 2024-25-ஆம் ஆண்டில் இதுவரை 25 தனிநபர்களுக்கும், 10 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.3 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
நம்முடைய வேலூர் மாவட்டத்தில் மட்டும் சிறுபான்மையினர் அதிகளவு வசிக்கக் கூடிய பகுதிகளில் உள்ள பள்ளிகளின் மேம்பாட்டிற்காக குறிப்பாக புதிய வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள், கழிவறை வசதி, சுற்றுசுவர் அமைத்தல் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.238 கோடி மதிப்பிலான 67 திட்டப் பணிகளுக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 37 பணிகள் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஆதாரங்கள் பெறப்பட்டவுடன் இப்பணிகள் விரைந்து தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிறுபான்மை இன மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு இம்மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுஜாதாஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் ஜானகிரவீந்திரன், மண்டலக் குழுத் தலைவர்கள் ஆர்.நரேந்திரன், கே.யூசுப்கான், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன், வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி லிட் இணைப்பதிவாளர் இராமதாஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சீதா, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment