P.T.LEE கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா.

  

·         P.T.LEE செங்கல்வராய நாயக்கர் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியின்  முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா!

·         கல்லூரி இயக்குனரின் முயற்சியால் தமிழகத்தில் முதன் முறையாக பாடங்களுக்கான குறுந்தகடுகள் மற்றும் மாணவர் கையேடுகள் வெளியீடு.

·         மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புக்காக பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.                                                                   

          காஞ்சிபுரம் மாவட்டம், அரக்கோணம் பிரதான சாலையில், ஊவேரிசத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள P.T.Lee செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கடந்த 23 ஆண்டு காலமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில், B. TECH: AI & DS, Information Technology மற்றும் B.E: CSE, ECE, EEE and Mechanical போன்ற பாடப்பிரிவுகளில் 23-24ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவர் மற்றும் முன்னாள் நீதியரசர் பொன்.கலையரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலாம் ஆண்டு துவக்க விழாவிற்கு தலைமை ஏற்றார்.

      மேலும், அறங்காவலர்கள் எல்.அருள், மருத்துவர் சி.வேணி, முனைவர் கே.ராமலிங்கம், எம்.ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஆட்சியர் வி.சந்திரசேகரன், கே.ஜெகந்நாதன், முனைவர் கே.மின்ராஜ், மருத்துவர் ஆர்.கண்ணையன் ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர்.

     இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் முனைவர் பி.பழனிச்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.

      தமிழ்நாடு தொழில் நுட்ப இயக்கத்தின் முன்னாள் கூடுதல் இயக்குனர், தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மற்றும் கல்லூரியின் இயக்குனருமான முனைவர் எம்.அருளரசு, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றி அரங்கை சிறப்பித்தார்.

      மேலும், துறை தலைவர்கள், வகுப்பாசிரியர்கள், கல்லூரியின் மருத்துவர், விடுதி காப்பாளர்கள், வன்பகடி தடுப்பு குழு பேராசிரியர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு குழு பேராசிரியர்கள் என அனைவரையும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

      பின்னர், கல்லூரி இயக்குனர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழகத்தின் முதல் முறையாக பள்ளி கல்விக்கும் கல்லூரி கல்விக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் ஒரு முயற்சியாக, தமிழகத்திலேயே முதன் முறையாக அண்ணா பல்கலை கழக பாடத்திட்டத்திற்கு ஏற்றபடி, அனைத்து பாடங்களுக்கான அடிப்படை தகவல்கள் அடங்கிய ஆறு குறுந்தகடுகள் வெளியிடப்பட்டன. மேலும், கல்லூரியின் அனைத்து தகவல்களும் அடங்கிய மாணவர் கையேடு மற்றும் பொறியியலில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் அடங்கிய கையேடும் வெளியிடப்பட்டன.

      இவற்றினை வெளியிட்டு தலைமை உரையாற்றிய அறக்கட்டளையின் தலைவர், முன்னாள் நீதியரசர் பொன்.கலையரசன் அவர்கள்,

       கடந்த மூன்று ஆண்டுகளில் அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பேற்று செய்த சாதனைகளை செய்தி கையேடாக வெளியிட்டு விவரித்தார். குறிப்பாக பொறியியல் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்ட, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஆய்வக வசதி மேம்பாடு ஆகியவற்றை குறிப்பிட்டு பேசினார்.

      கல்லூரியில் பயிலும் வன்னியர் குல சத்திரிய மாணவர்களுக்கு,  பொறியியல் கட் ஆப் மதிப்பெண் 130-க்கு இருப்பவர்களுக்கு பாதி கட்டண சலுகை மற்றும் 150-க்கு மேல் இருப்பவர்களுக்கு முழு கட்டண சலுகை என இந்த கல்வியாண்டு மட்டும் கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய் அளவிற்கு அறக்கட்டளை சார்பாக வழங்கப்படுவதை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

             இதன் மூலம், அறக்கட்டளையின் நிறுவனர் வள்ளல் செங்கல்வராய நாயக்கர் உயில்படி, ஏழை எளிய மாணவர்கள் தொழில்நுட்ப கல்வி பயில வேண்டும் என்ற கனவு நினைவாக்கப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

           மேலும் அவர் மாணவர்கள் மிகுந்த ஒழுக்கத்துடன் திகழ வேண்டும் என்றும், ஒழுக்கம் இல்லாத கல்வி எந்த வகையிலும் பயனற்றது என்றும் அறிவுரை கூறினார். அண்ணா பல்கலை தரவரிசை பட்டியலில் முன்னேறியதற்காக கல்லூரி பேராசிரியர்களுக்கு பாராட்டுதலும் நன்றியும் தெரிவித்தார். பிறகு, பாட புத்தகங்கள் அடங்கிய தொகுப்பினை மாணவர்களுக்கு வழங்கினார்.

     விழாவின் இறுதியில், அறிவியல் மற்றும் மானுடவியல் துறை தலைவர் முனைவர் கா.சுரேஷ்குமார் நன்றி உரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியினை, பேராசிரியர்கள் முனைவர். R.நாகராஜ் மற்றும் முனைவர். E.சீனிவாசன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

      முன்னதாக, கல்லூரியில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு பிரிவு மூலம் நான்கு பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

   இவ்விழாவில், அறக்கட்டளையின்செயலாளர்,  பி.சுந்தரம், K.N.பாலாஜி, துறைதலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• தனியார் பள்ளிகளின் மாவட்டக் கல்வி அலுவலராக கோ.பழனி பொறுப்பேற்பு

• வள்ளல் பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் 149-ம் ஆண்டு நினைவேந்தல்.

• P.T.Lee செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லூரியில் மாணவர் விடுதி திறப்பு விழா!