Posts

• நான் முதல்வன் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையம்.

Image
·         தமிழ்நாடு துணைமுதலமைச்சர் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் இளைஞர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் விதமாக நான் முதல்வன் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து ,   வேலூர் மாவட்டம் , வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள நான் முதல்வன் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையத்தை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.                 தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்கால வாழ்வினை கருத்தில் கொண்டு அவர்களின் வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்தும் பொருட்டு இளைஞர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் விதமாக நான் முதல்வன் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையங்களை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.                 தமிழ்நாட...

• வேலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தினம்.

Image
·         வேலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தினம் - 106 சிறுபான்மையினர்களுக்கு ரூ.10.37 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார். வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் சிறு தொழில் செய்வதற்கு 106 சிறுபான்மையினர்களுக்கு ரூ.10.37 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் (ம) பணியாளர்கள் நலவாரியத்தின் மூலம் 05 நபர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது , மதவழி சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்கள் , கிறிஸ்தவர்கள் , புத்த மதத்தினர் , சீக்கியர்கள் , பாரசீகர்கள் மற்றும் ஜெயின் மதத்தினர் ஆகியோர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் சிறுபான்மையினருக்கான பல்வேறு நலத்திட்டங்களை சென்றடைய விழிப்புணர்வு ஏற்...