Posts

• வள்ளிமலை அண்ணா நினைவு பொது விருந்து.

Image
 ·          வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு பொது விருந்து.       வேலூர் மாவட்டம் , காட்பாடி அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சாதி, மத, பேதமின்றி அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தி சமபந்தி எனப்படும் பொதுவிருந்து நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு அறுவை விருந்து உணவாக பரிமாறப்பட்டது. பொதுமக்களும் உணவு உண்டனர்.  

• வேலூர் அருகே அரசு டவுன் பஸ் மீது கார் மோதி பெண் பலி.

Image
·          வேலூர் அருகே அரசு டவுன் பஸ் மீது கார் மோதி பெண் பலி.             கர்நாடக மாநிலம் , பெங்களூரை சேர்ந்தவர் முகமது அசார் . இவரது மனைவி ஷெரின்தாஜ் ( வயது 28). அவரது உறவினர் சினேதா (27). ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விசாரத்தில் உள்ள முகமதுஅசாரின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள ஷெரின்தாஜ் , அவரது உறவினர் சினேதா மற்றும் 3 குழந்தைகளுடன் காரில் வந்தனர் . முகமதுஅசார் காரை ஓட்டி வந்தார் . இறுதி சடங்கு முடிந்து மீண்டும் பெங்களூரு புறப்பட்டனர் . அவர்கள் வந்த கார் அப்துல்லாபுரம் அடுத்த தெள்ளூர் கூட்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தது .              வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து செதுவாலை நோக்கி இன்று காலை அரசு டவுன் பஸ் சென்று கொண்டு இருந்தது . அப்துல்லாபுரம் அடுத்த தெள்ளூர் கூட்டு ரோட்டில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க...

• வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் -2026.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் - 2026 -   ( Special Intensive Revision-2026)  இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுத்தலின்படி , வேலூர் மாவட்டம் 01.01.2026- ஐ தகுதி நாளாகக் கொண்டு நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் ( Special Intensive Revision-2026) தொடர்பாக , வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 1427 வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19- ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19 முதல் ஜனவரி 30- ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் , நீக்கல் மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் நேரடியாகவும் , இணையதளம் வழியாகவும் பெறப்பட்டு வருவகின்றன.  19.12.2025 முதல் 30.01.2026 வரையிலான ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில் பின்வரும் எண்ணிக்கையிலான படிவங்கள் நேரடியாகவும் மற்றும் இணையவழியிலும் பெறப்பட்டுள்ளன .   படிவம் நேரடியாக பெறப்பட்ட படிவங்...

• வேலூரில் வட தமிழ் மாநில கிறிஸ்தவ பக்தி முயற்சி சங்கம் முப்பெரும் விழா.

Image
 ·          வேலூரில் வட தமிழ் மாநில கிறிஸ்தவ பக்தி முயற்சி சங்கம் சார்பில் முப்பெரும் விழா.      வேலூர் மாநகரில் ஆசிரியர் இல்லத்தில் கிறிஸ்தவ பக்தி முயற்சி சங்கம் உருவான நாளை முன்னிட்டு வட தமிழ் மாநில கிறிஸ்தவ பக்தி முயற்சி சங்கம் சார்பில் கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் பக்தி சங்கம் உருவான முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.        பக்தி முயற்சி சங்க தலைவர் அருள்திரு . G. ஆனந்தன்அகிமாஸ் தலைமையில் “ மகிழ்வோம் மகிழ்வோம்” பாடல் பாடி, ஆரம்ப ஜெபம் அருள்திரு D. ஜேக்கப் ஆயர் செய்ய, Dr.M. சந்திரதேவநேசன்   அனைவரையும் வரவேற்றார் .       இந்த விழாவில் தொடர்ந்து Rt.Rev.Dr.J. டேவிட் ஒனேசிமஸ் , ஊரிசு கல்லூரி முன்னாள் முதல்வர் Dr. ஸ்டேன்லி ஜோன்ஸ் , A. பாஸ்கர் , HM, D. சார்லஸ் ( முன்னாள் மத்திய ஆலய செயலர் , பொருளர் ), Rev.S. ரூபஸ் ஆயர், Rev.M. ஆன்ரூ   அண்ணாமலை ஆயர், அருள்திரு Rev.B. புஷ்பநாதன் ஆயர், G. கோயில்பிள்...