• வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் -2026.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் -2026 - (Special Intensive Revision-2026)
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுத்தலின்படி, வேலூர் மாவட்டம் 01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (Special Intensive Revision-2026) தொடர்பாக, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 1427 வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19 முதல் ஜனவரி 30-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் நேரடியாகவும், இணையதளம் வழியாகவும் பெறப்பட்டு வருவகின்றன.
19.12.2025 முதல் 30.01.2026 வரையிலான ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில் பின்வரும் எண்ணிக்கையிலான படிவங்கள் நேரடியாகவும் மற்றும் இணையவழியிலும் பெறப்பட்டுள்ளன.
|
படிவம் |
நேரடியாக பெறப்பட்ட படிவங்களின் எண்ணிக்கை |
இணையவழியில் பெறப்பட்ட படிவங்களின் எண்ணிக்கை |
மொத்த பெறப்பட்ட படிவங்களின் எண்ணிக்கை |
|
படிவம் 6 |
31725 |
7445 |
39170 |
|
படிவம் 6A |
1 |
15 |
16 |
|
படிவம் 7 |
6265 |
323 |
6588 |
|
படிவம் 8 |
12923 |
4105 |
17028 |
|
மொத்தம் |
50914 |
11888 |
62802 |
மேற்படி விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரிப்பார்க்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்படும். கால அவகாசம் முடிவடைந்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். இவர்களின் பெயர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெறாவிட்டாலும், துணைப் பட்டியலில் சேர்க்கப்படும். எனவே, அவர்களால் வாக்களிக்க முடியும் என வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment