Posts

• முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு சான்று.

முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு 2026-2027 கல்வி ஆண்டில் கல்லூரியில் சேர சார்ந்தோர் சான்று பெற்று பயனடைய வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். 2026-2027-ஆம் கல்வி ஆண்டிற்கு கல்லூரி சேர்க்கையின்போது முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பட்டயப்படிப்பு மற்றும் தொழிற் கல்விகளுக்கு தமி ழ்நாடு அரசால் சிறப்பு இட ஒதுக்கீட்டின் வாயிலாக கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க படைவிலகல் சான்றில் தமிழ்நாடு முகவரியை கொண்ட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்தம் கைம்பெண்கள் 2026-2027-ஆம் ஆண்டிற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், + 2 மதிப்பெண் சான்று, படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி சார்ந்தோர் சான்று பெற்று பயனடையுமாறும்,   கடந்த ஆண்டு பெற்ற சார்ந்தோர் சான்றினை பயன்படுத்த கூடாது எனவும் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

• வேலூர் வெப்ப அலை வேளாண் பயிர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

வேலூர் மாவட்டத்தில் வேளாண் பயிர்களை பாதுகாத்திட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக ளை மேற்கொள்ளுமாறு   மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். வெப்ப அலை விழிப்புணர்வு 2026 வேளாண் பயிர்களை பாதுகாத்திட எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எல் நினோ நிகழ்வினால் , காலநிலையில் இந்த ஆண்டு அதிக அளவு மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. I.                    பொதுவான அறிவுரைகள் ·          கோடை உழவு செய்ய வேண்டும். ·          கோடையில் உயர் மதிப்புடைய பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ·          விதை நேர்த்தி செய்ய வேண்டும். ·          உயிர...