• வேலூர் வெப்ப அலை வேளாண் பயிர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

  • வேலூர் மாவட்டத்தில் வேளாண் பயிர்களை பாதுகாத்திட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

வெப்ப அலை விழிப்புணர்வு 2026

வேளாண் பயிர்களை பாதுகாத்திட எடுக்கப்பட வேண்டிய

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

எல் நினோ நிகழ்வினால், காலநிலையில் இந்த ஆண்டு அதிக அளவு மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

I.                   பொதுவான அறிவுரைகள்

·         கோடை உழவு செய்ய வேண்டும்.

·         கோடையில் உயர் மதிப்புடைய பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

·         விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

·         உயிர் உரங்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும்.

·         நண்பகலில் நீர்ப்பாசனம் செய்வதைத் தவிர்க்கவேண்டும்.

·         பயிர்களுக்கு இடையே தகுந்த இடைவெளி மற்றும் கவாத்து முறைகளை மேற்கொண்டு காற்றோட்டத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

·         மண் ஈரப்பதத்தைப் பாதுகாக்க மேற்புற வெப்பநிலையைக் குறைக்கவும் இயற்கை முறை மூடாக்குகள் (வைக்கோல், கரும்புத் தோகை) ஏற்படுத்த வேண்டும்.

·         வறட்சியை எதிர்கொள்ள நுண்ணீர்ப்பாசன முறைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும்.

·         நாற்றங்கால்கள் மற்றும் அதிக மதிப்புடைய காய்கறித் தோட்டங்களுக்கான நிழல் வலைகள் அல்லது தற்காலிக நிழல் அமைப்புகளும், குறுகிய காலத்திற்கு 30-50% நிழல் தரக்கூடிய நிழல் வலைகளைப் பயன்படுத்தலாம்.

·         நீராவிப்போக்குத் தடுப்புத் தெளிப்புகளைப் பரிந்துரைக்கப்பட்டவாறு பயன்படுத்த வேண்டும்.

·         விரைவில் அழுகக்கூடிய பயிர்களில் அதிகாலையில் அறுவடை மேற்கொள்ள வேண்டும்.

·         இலை வழி பயிர் ஊக்கிகளை நல்ல தரமான நீரைப் பயன்படுத்தி தெளிக்கவேண்டும்.

·         வானிலை மாற்றங்கள் மற்றும் பருவமழை துவக்கம் குறித்த தகவல்களை ஊடகங்கள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.

·         அதிக வெப்ப நேரமான மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலான காலத்தில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

·         வெப்பத்தைத் தாங்கக்கூடிய பயிர் இரகங்களையும், குறுகிய கால இரகங்களையும் சாகுபடி செய்ய வேண்டும்.

·         பு{ மற்றும் காய் பிடிக்கும் நிலையிலுள்ள பழப்பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்திட முன்னுரிமை அளிக்க வேண்டும்.

·         உயர் மதிப்பு கொண்ட பழப்பயிர்களுக்கு தண்ணீர் தெளித்தல் (தெளிப்பு நீர் பாசனம்) மூலம் வெப்பத் தாக்கத்தை குறைக்கலாம்.

·         பயிர்களின் பூ (ம) காய் பிடிக்கும் பருவங்கள் அதிக வெப்பத்தினால் பாதிக்காத வண்ணம் விதைப்புத் தேதியை மாற்றி விதைக்க வேண்டும்.

·         வேளாண் காடுகள் வளர்ப்பதன் மூலம் வயல்களுக்கு நிழல் மற்றும் காற்றுத் தடுப்புகளை உருவாக்கி வெப்ப அலைகளிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

·         பிரதிபலிக்கும் கூரைகள் (ம) 30-70 % நிழல் தரக்கூடிய நிழல் அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டு கால்நடைக் கொட்டகைகளை மேம்படுத்த வேண்டும்.

 II. பயிர் வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்:

நெல்

  • பல்வேறு பயிர் வளர்ச்சி நிலைகளில் 3% கயோலின் (Kaolin) அல்லது 1% பொட்டாசியம் குளோரைடு (KCI) கரைசலை இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.
  • பிபிஎஃஎம் (PPFM - Pink Pigmented Facultative Methylotrophs நுண்ணுயிரிகள்) எக்டருக்கு 500 மில்லி வீதத்தில் 15 நாட்கள் இடைவெளியில் இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.
  • தானியங்கள் முதிர்வடைவதற்கு 15 நாட்களுக்கு முன்னரும், பூக்கும் பருவத்திலும் 2% மோனோஅம்மோனியம் பாஸ்பேட் (MAP) + 1% பொட்டாசியம் குளோரைடு (KCI) கரைசலை இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.
  • வளர்ச்சிப் பருவத்தில் (குறுவைப் பருவத்தின் போது) 1% பொட்டாசியம் குளோரைடு (KCI) + சைகோசல் (CCC) 500 ppm அளவில் கரைசலை இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.

பயறு வகைகள்

·      பூ பிடிக்கத் தொடங்கும் நிலையில், TNAU பயறு ஒன்டர் (TNAU Pulse Wonder) கலவையை ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் 200 லிட்டர் நீரில் இலைவழித் தெளிப்பாகப் பயன்படுத்த வேண்டும்.

·      பூப்பதற்கு முந்தைய நிலையிலும், அதன்பின் 15 நாட்கள் கழித்தும், பூ உதிர்வதைக் குறைப்பதற்காக 100 ppm செறிவுள்ள சாலிசிலிக் அமிலம் (Salicylic acid) அல்லது 40 ppm செறிவுள்ள நாஃப்தலின் அசிட்டிக் அமிலம் (NAA) கலவையை இலைவழித் தெளிப்பாகப் பயன்படுத்த வேண்டும்.

கரும்பு

·      மண் ஈரப்பதம் குறைவாக உள்ள காலங்களில், 15 நாட்கள் இடைவெளியில் 2.5% பொட்டாஷ் மற்றும் 2.5% யூரியா கலவையை இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.

·      மகசூலை அதிகரிக்க, நடவு செய்த 45, 60 மற்றும் 75-வது நாட்கள் முறையே ஏக்கருக்கு 1.0, 1.5 மற்றும் 2.0 கிலோ அளவில் 'கரும்பு பூஸ்டர்' (Sugarcane booster) மற்றும் போதுமான அளவு ஒட்டுப்பொருள் (wetting agent) கலந்த கரைசலை இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.

·      நீர் இழப்பைக் குறைக்க, 5% கயோலின் (Kaolin) கரைசலை இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.

·      மண் ஈரப்பத்தைப் பாதுகாக்க கரும்புத் தோகை மூடாக்கு (Trash mulching) நடவு செய்த 5-வது மாதத்தில் காய்ந்த தோகைகளை அகற்றி, அவற்றை வயலிலேயே மூடாக்காகப் பரப்பி வைக்க வேண்டும்.

·      மண் ஈரப்பதத்தைப் பாதுகாக்க, கடைசி உழவின்போது எக்டருக்கு 25 டன் என்ற அளவில் தென்னைநார் கழிவை (coir waste) அடியுரமாக மண்ணில் இட்டு உழ வேண்டும்.

 நிலக்கடலை

  • பூக்கள் உதிர்வதைக் குறைக்கவும், காய்கள் நன்கு திரளவும், அதிகபட்ச பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவங்களில், 200 லிட்டர் நீரில் 2 கிலோ (ஒவ்வொரு முறை தெளிக்கும்போதும்) என்ற அளவில் TNAU நிலக்கடலை ரிச் ('TNAU Groundnut Rich')-ஐ கலந்து இலைவழித் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்.
  • மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க பாலித்தீன் படல மூடாக்கு (Polythene film mulching) அமைக்க வேண்டும்.

பருத்தி

  • மொட்டுகள் மற்றும் பூப்பருவ மொட்டுகள் (squares) முன்கூட்டியே உதிர்வதைத் தடுக்க, பூக்கும் மற்றும் காய்பிடிக்கும் பருவங்களில், ஏக்கருக்கு 2.5 கிலோ TNAU பருத்தி பிளஸ் ('TNAU Cotton Plus')-200 லிட்டர் நீரில் கலந்து இலைவழித் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்.
  • நெல்-பருத்தி பயிர் சாகுபடி முறையில், கோடைக்காலப் பாசனப் பருத்தியை தாமதமாக (மார்ச் மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில்) விதைத்திருந்தால், விதைத்த 50 மற்றும் 70-ஆம் நாட்களில் 1% பொட்டாசியம் குளோரைடு (KCI) கரைசலை இருமுறை இலைவழித் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்.
  • மகசூலை அதிகரிக்க, விதைத்த 60 மற்றும் 90-ஆம் நாட்களில் 40 ppm செறிவில் நாஃப்தலின் அசிட்டிக் அமிலம் (NAA)-வை இலைவழித் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்.

மக்காச்சோளம்

·      கதிர் பிடிக்கும் நிலையிலும், தானியங்கள் நிரம்பும் நிலையிலும், ஏக்கருக்கு 3 கிலோ என்ற அளவில் TNAU மக்காச்சோள மேக்சிம் ('TNAU Maize Maxim')-200 லிட்டர் நீரில் கலந்து இலைவழித் தெளிப்பாகத் தெளித்து மகசூலைப் பெருக்கலாம்.

தக்காளி

§  பு{ உதிர்தலைக் கட்டுப்படுத்தவும் காய் பிடிப்பை மேம்படுத்தவும் நடவு செய்த 15 நாட்களுக்கு பிறகு பயிர் முழுமையாக பு“க்கும் நிலையில் டிரையாகோன்டனால் @1.25 ppm செறிவுள்ள (500 லிட்டர் தண்ணிரில் 625 மிலி) கரைசலை இலைவழி தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

§  பு{ உதிர்தலைக் கட்டுப்படுத்தவும் காய் பிடிப்பை மேம்படுத்தவும் நாற்று நட்ட 40 நாட்களுக்கு பிறகு 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை 0.5% துத்தநாக சல்பேட் (ZnSO4) கரைசலை இலைவழி தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

§  மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க 25 மைக்கரான் தடிமன் கொண்ட கருப்பு LDPE தாள்களைக் கொண்டு மூடாக்கு இடவேண்டும்.

வெண்டை

§  மகசூலை அதிகரிக்க நடவு செய்து 30 மற்றும் 45 நாட்களுக்கு பிறகு 1% யுரியா + 1 MOP இலைவழி தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

§  கலப்பின வெண்டைப் பயிர்களாக இருப்பின் , மகசூலை அதிகரிக்க நடவு செய்த 30 நாட்களுக்கு பிறகு 10 நாட்கள் இடைவெளியில் 0.5% 0.5% தழை மணி, சாம்பல் சத்துக்களை (19:19:19) இலைவழித் தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

கத்தரி

§  பு{ மற்றும் காய் பிடிப்பை அதிகரிக்க நடவு செய்த 15 நாட்களுக்கு பிறகு செடி முழுமையாக பு“க்கும்போதும் , டிரையாகோன்டனால் @ 2 ppm மற்றும் சோடியம் போரேட் அல்லது போராக்ஸ் (1 லிட்டர் தண்ணீரில் 35 மிகி) ஆகியவற்றை இலைவழி தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

§  மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்க 25 மைக்ரான் தடிமன் கொண்ட கருப்பு LDPE தாள்களை கொண்டு மூடாக்கு இடவேண்டும்.

மிளகாய்

§  பு{ மற்றும் காய் பிடிப்பை அதிகரிக்க 1% பொட்டாசியம் சல்பேட்டை இலைவழி தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

§  காய்பிடிப்பை  அதிகரிக்க நாற்று நட்ட 60 மற்றும் 90 நாட்களுக்கு பிறகு 10ppm செறிவுள்ள நாப்ஃதலின் அசிட்டிக் அமிலம் (NAA) ஐ இலைவழி தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

 மா

§  வெப்பமான மற்றும் வறண்ட காலங்களில் பாசனநீரை இலைவழி யாகத் தெளிக்க வேண்டும்.

§  பிப்ரவரி முதல் மே மாதம் வரை வெப்பக்காற்றிலிருந்து பழத்தோட்டத்தைப் பாதுகாக்க  காற்று தடுப்புகளை பயன்படுத்த வேண்டும்.

§  பயிரை புத்துணர்ச்சியுட்ட, 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை 0.5% தழை, மணி, சாம்பல் சத்துக்களை (19:19:19) +0.5% பெர்ர்ஸ் சல்பேட் (FeSO4) +0.25% துத்துநாக சல்பேட் (ZnSO4)+ 0.3% போராக்ஸ் கலந்த கரைசலை இலைவழி தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

§  காய்பிடிப்பை அதிகரிக்கவும் பழங்கள் உதிர்வினை குறைக்கவும் கடுகு அளவு காய் பருவத்தில் 2% பொட்டாசியம் நைட்ரேட் (KNO3)-ஐ இலைவழி தெளிப்பாக தெளிக்க வேண்டும்

§  பழங்கள் உதிர்வினை குறைக்க 20ppm செறிவுள்ள நாஃப்தலின் அசிட்டிக் அமிலம்(NAA) -ஐ பு{  பு{க்கும் பருவத்தில் இலைவழி தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

வாழை

§  35 அல்லது 55 நாட்கள் ஆன வாழைக்குலைகளை கொண்ட வாழைப்பயிர்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள், 50 “ செறிவுள்ள ஜிபெரில்லாக் அமிலத்தை (GA3) மூன்று முறை இலைவழி தெளிப்பதன் மூலம் இளம் மற்றும் முதிர்ந்த வாழைக்குலைகள் இரண்டிலும் உள்ள பழங்களின் எடையையும் கன அளவையும் அதிகரிக்கலாம்.

§  வாழையின் மகசூலையும் தரத்தையும் அதிகரிக்க 3, 5 மற்றும் 7 வது மாதங்களில் 0.5% துத்தநாக சல்பேட் (ZnSO4) +0.2% பெர்ர்ஸ் சல்பேட் (FeSO4) 0.2% காப்பர் சல்பேட் CuSO4+0.1% போரிக் அமிலம் (H3BO3) கலந்த கரைசலை இலைவழி தெளிப்பாக தெளிக்க வேண்டும்

சம்பங்கி மற்றும் மல்லிகை

§  பு{  மகசூலை அதிகரிக்க , முளைக்கிழங்குகளை 5,000  ppm செறிவுள்ள சைகோசல் (CCC) கரைசலில் நனைக்கவும்.

§  0.5% துத்தநாக சல்பேட் (ZnSO4)+ 0.2% பெர்ரஸ் சல்பேட்(FeSO4) +0.1% போரிக் அமிலம் கலந்த கரைசலை இலைவழி தெளிக்கவும்.

§  நடவு செய்த 40, 55 மற்றும் 60 நாட்களுக்கு பிறகு 50-100ppm செறிவுள்ள ஜிபெரில்லிக் அமிலம்(GA3) – ஐ மூன்று முறை இலைவழி தெளிக்கவும்.

§  மல்லிகையில் முன்பருவ பு {உற்பத்தியை அதிகரிக்க 1,000 ppm செறிவுள்ள சைகோசால் (CCC) கரைசலை இலைவழி தெளிக்கவும்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.