• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.
· ஆக்சிலியம் கல்லூரி ஈரான்-இஸ்ரேல் போருக்கு எதிரான அமைதி பேரணி.
வேலூர் மாவட்டம், காட்பாடி, ஆக்சிலியம் கல்லூரி சார்பில் ஈரான் - இஸ்ரேல் போருக்கு எதிரான மாபெரும் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் முனைவர் மேரிஜோஸ்பின்ராணி தலைமை தாங்க, கல்லூரி முதல்வர் முனைவர் ஆரோக்கியஜெயசிலி வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைத்தார்.
கல்லூரி துணைமுதல்வர் முனைவர் அமலாவளர்மதி மற்றும் தேர்வாணையர் முனைவர். வின்சி முன்னிலை வகித்தனர். ஆக்சிலியம் கல்லூரி வளாகத்திருந்து தொடங்கப்பட்ட இந்த பேரணி, காந்தி நகர் கல்யாண மண்டபம் வரை நிறைவடைந்தது. வரலாற்று துறை மூன்றாமாண்டு மாணவி காமாட்சி கன்னிகை மற்றும் காட்சிப் புலவியல் துறை மாணவி சாஃப்ரன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் வரலாற்று துறை மாணவிகள், காட்சி புலவியல் துறை மாணவிகள், கணினி செயல்பாட்டியல் துறை மாணவிகள் “உலக அமைதிக்காக பாடுபடுவோம்”என்ற முழக்கத்தோடு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இப்பேரணியில் மாணவிகள், பேராசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை வரலாற்று துறைத் தலைவர் முனைவர் அருட்சகோதரி சுமதி, காட்சிப் புலவியல் துறை தலைவர் அருட்சகோதரி செலின் ஒருங்கிணைத்தனர்.

Comments
Post a Comment