Posts

Showing posts from July, 2026

• வேலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்பாட்டம்.

Image
 ·          வேலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்தும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சு-க்கு ஆதரவாக ஆர்பாட்டம்.        வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ஜோஷி தலைமையில் கண்டன ஆர்பாட்டமானது நடைபெற்றது.       நீட் முறைகேடு மற்றும் கல்வி துறையின் சீரழிவை பொறுப்பேற்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தடியடி நடத்தியதை கண்டித்தும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சு - க்கு ஆதரவாகவும் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.     இதில் வருவாய் துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ், நிர்வாகிகள் தீனாசேகர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.  

• மூலைகேட் அரசு ஆரம்ப பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா.

Image
·          மூலைகேட் அரசு ஆரம்ப பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா .     வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மூலைகேட் அரசு ஆரம்ப பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது .          இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப்அன்னையா தலைமை தாங்கினார் . வல்லண்டராமம் ஊராட்சி மன்ற தலைவர் மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் . ஆசிரியை ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார் .            கல்வி வளர்ச்சி நாளையொட்டி தமிழ் ஆங்கில பேச்சு திறன் போட்டி , திருக்குறள் ஒப்புவித்தல் திறன் போட்டி , பாடும் திறன் போட்டி , வண்ணம் தீட்டும் திறன் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன .        மேலும் காமராஜரை பற்றி பள்ளி மாணவர்கள் கோஷின் , மித்ரன், தாட்சாயினி, மகிழ்வதனி, செல்வி ஆகியோர் ஆங்கிலம் மற்றும் தமிழில் சிறப்பாக உரையாற்றினர் . முடிவில் ஆசிரியை ...

• வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

·         வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் , படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 28.07.2026 அன்று   நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 28.07.2026 2 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 3.30 3 மணிக்கு மாவட்ட ஆட்சி யர் அலுவலக காயிதேமில்லத் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது. அவ்வமையம் வேலூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தை சார்ந்தோர்கள் தங்கள் குறைகளை மனுக்களாக படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர்-டம் சமர்ப்பித்து பயனடையுமாறு   கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

• வேலூர் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

Image
·         வேலூர் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.  வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தொரப்பாடி ஏரி,   வேளாண்மை துறையின் சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம், மணிலா விதை பண்ணை திட்டம் போன்ற திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.                  வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வேலூர் தொரப்பாடி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தொரப்பாடி ஏரியின் வலது கழிங்கின் வழிந்தோடி உபரி நீர் செல்லும் பகுதிகளில் உள்ள வீடுகள், சாலைகளில் வெள்ளம் செல்வதை தவிர்க்கும் பொருட்டு கால்வாயில் தண்ணீர் செல்லும் பாதையில் தேவையான இடங்களில் வெள்ளப் பாதுகாப்பு சுவரை கட்டுவதன் மூலமும், குடியிருப்பு பகுதியின் இடையே செல்லும் கால்வாயினை மூடி செல்லும் வகையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் தேவையான மதிப்பீடு தயார் செய்ய தள ஆய்வுகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து கணியம்பாடி ஊராட்சி ஒன்ற...

• வேலூர் மாநகராட்சியில் நகராட்சி நிர்வாகம் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு.

Image
 ·         நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் வேலூர்    மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப்சிங்பேடி வேலூர்    மாநகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் குழாய் பாலம் அமைக்கும் பணி, பயோமைனிங் முறையில் குப்பைகளை அகற்றும் பணி, திடக்கழிவு மேலாண்மை மையத்தில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் வேலூர் மாநகராட்சி, சர்க்கார்தோப்பு பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, காகிதப்பட்டறை முதல் விருதம்பட்டு வரை கழிவுநீர் குழாய் எடுத்து செல்வதற்கான பாலம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து...

• வேலூர் மாவட்ட தூய்மை பணியாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்.

Image
 ·         வேலூர் மாவட்டத்தில் 'தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்' (SWDS) கீழ், தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான பல்வேறு நலத்திட்டங்கள், சமூக பாதுகாப்பு, வாழ்வாதாரம், திறன் மேம்பாடு மற்றும் நிதி சேவைகள் சென்றடைதல் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் 'தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்' (SWDS) கீழ், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான பல்வேறு நலத்திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், திறன் மேம்பாடு மற்றும் நிதி சேவைகள் சென்றடைதல் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் சமூக-பொருளாதார நல்வாழ்வு, வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் கண்ணியம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, அரசு வழிகாட்டுதலின் படி, தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய பதிவு, ஆதார் பதிவு மற்...

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

Image
·         வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 687 கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.           வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை , காவல் துறை , ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நி ரு வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சார துறை சார்பான குறைகள் , மாற்று திறனாளிகள் நல துறை . மருத்துவ துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 687 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர், பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட ...

• வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் சிறார் கல்வி உதவி தொகை.

·         வேலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு வழங்கப்படும்   கல்வி உதவி தொகை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள்   வரவேற்கப்படுகின்றன - மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.     பாரத பிரதமரின் கல்வி உதவி தொகை (PMSS ) / ரக்சா மந்தரியின் முன்னாள் படைவீரர் நல நிதியின் கல்வி உதவி தொகை ( RMEWF) பெற தகுதி இல்லாத மற்றும் நிராகரிக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் கல்வி உதவி தொகை (ECLIG) 2026-27 பெறுவதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 30-ம் தேதி வரை இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறது. மேலும் முன்னாள் படைவீரர் மற்றும் கைம்பெண்கள் அவர்களது சிறார்களுக்கு தொகுப்பு நிதி கல்வி உதவி தொகை கோரும் நேர்வில் 01 முதல் 12-ம் வகுப்பு வரை நடப்பு ஆண்டிலும் ( Current Year ) ஏனைய படிப்புகளுக்கு நடந்து முடிந்த கல்வி ஆண்டிற்கும் விண்ணப்பித்து பயனடையுமாறும், மேலும் விவரங்களுக்கு வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகுமாறும் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்....

• வேலூரில் இலவச கண் மருத்துவ முகாம்.

Image
·          வேலூரில் இலவச கண் மருத்துவ முகாம் - 100 பேர் பங்கு பெற்றனர்.       வேலூரில், வேலூர் கட்டிட பொறியாளர்கள் சங்கம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் மருத்துவ முகாமை மருத்துவமனை வளாகத்தில் நடத்தியது .       முகாமிற்கு வாசன் கண் மருத்துவமனை குழுமத்தின் பொது மேலாளர் செல்வம் தலைமை தாங்கினார் . வேலூர் கட்டிட பொறியாளர் சங்க தலைவர் வி . எஸ் . அர்ஜுனன் முன்னிலை வகித்தார் . வாசன் கண் மருத்துவமனை வேலூர் மேலாளர் விஜயகுமார் வரவேற்றார் .     முகாமில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பொறியியல் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சு . பாஸ்கரன் கலந்து கொண்டு பேசினார் .       முகாமில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர் . கண் பரிசோதனை செய்ய வந்தவர்களை மூத்த கண் டாக்டர்கள் சர்வேஸ்வரன் , ஸ்ரீஷா மற்றும் டாக்டர்கள் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர் .       முகாமில் கட்டிட பொற...