• சுதந்திர போராட்ட தியாகிகள் குறை தீர்வு கூட்டம்.


 ·         சுதந்திர போராட்ட தியாகிகள் குறை தீர்வு கூட்டம் - மாவட்ட வருவாய் அலுவலர்  தலைமையில் நடைபெற்றது.

     வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதேமில்லத் அரங்கில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் குடும்பங்களுக்கான குறை தீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் தியாகிகளின் வாரிசுகள் பங்கேற்றனர்.

     இதில் அனைத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மேலும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இலவச பயண அட்டைகள் வழங்க வேண்டும். அளிக்கும் மனுக்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை  தெரிந்து கொள்ளும் வகையில் பதிவேடுகள் பராமரிக்க வேண்டும். 

         தியாகிகளின் வாரிசுகளின் மாநில அளவிலான கொள்கை பிரச்சணை குறித்து பதிவு செய்து மாநில அளவிலான பிரச்சணைகளை தீர்க்க அரசுக்கு கோரிக்கைகள் குறித்து பரிந்துரை கடிதங்கள் அனுப்ப வேண்டும்   உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

            இக்கூட்டத்தில் அதிகாரிகள் வராததால் அவர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதங்களை அனுப்ப மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உத்தரவிட்டார். பின்னர் தியாகிகளின் வாரிசுகளிடம் மனுக்களையும் பெற்று கொண்டார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.