• வேலூர் விஐடி பல்கலைகழக 41-வது பட்டமளிப்பு விழா.
· இந்தியாவை ' செயற்கை நுண்ணறிவை உருவாக்குபவராக ' மாற்ற வேண்டும் - தில்லி முதல்வர் ரேகா குப்தா வேண்டுகோள். · வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் 41 - வது பட்டமளிப்பு விழா. வேலூர் : இந்தியாவை ' செயற்கை நுண்ணறிவை உருவாக்குபவராக ' மாற்ற வேண்டும் என தில்லி முதல்வர் ரேகாகுப்தா வேண்டுகோள் விடுத்தார் . வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் 41 - வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக தில்லி முதல்வர் ரேகாகுப்தா கலந்து கொண்டு மாணவ , மாணவிகளுக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது : அரசும் , பட்டதாரிகள் இணைந்து செயல்பட்டால் பல சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும் . தில்லி நகரம் சந்திக்கும் மாசு , போக்குவரத்து , கழிவு மேலாண்மை போன்ற பிரச்சனைகளை தீர்க்க ஐஐடி-யுடன்...