• வேலூர் மாவட்ட திட்ட பணிகள் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர்.
· வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணி துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மாற்று திறனாளிகள் நல துறை மற்றும் இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் ரூ.20.79 கோடி மதிப்பில் 61 முடிவுற்ற திட்ட பணிகளை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திறந்து வைத்து, ரூ.70 இலட்சம் மதிப்பில் 1 பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணி துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மாற்று திறனாளிகள் நல துறை மற்றும் இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் ரூ.20.79 கோடி மதிப்பில் 61 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி ரூ.70 இலட்சம் மதிப்பில் 1 பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் சின்ன அல்லாபுரம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.86.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை திறந்து வைத்து, மரக்கன்றுகளை நடவு செய்தார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் வேலப்பாடி வி.கே.வி.எம். அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவறை கட்டிடம் மற்றும் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், மூஞ்சூர்பட்டு கிராம ஊராட்சியில் ரூ.16.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகிய முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்
தொடர்ந்து கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் பென்ட்லேண்ட் அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.16.50 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள கோட்ட அளவிலான விழுதுகள் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தை திறந்து வைத்து, இயக்கத்திறன் குறைபாடுடைய 5 மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் ரூ.3,77,600/- மதிப்பிலான செயற்கை அவையங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேர்ணாம்பட்டு பழைய அரசு மருத்துவமனையில் ரூ.11.79 இலட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தை திறந்து வைத்தார்.
மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிறப்பு பயிற்சிகளான பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, பேச்சு மற்றும் மொழிசார் சிகிச்சை, உளவியல் ஆலோசனை, சிறப்புக் கல்வி மற்றும் கண் பரிசோதனை உள்ளிட்ட தகுந்த நிபுணர்களால் பல்வேறு மறுவாழ்வு சேவைகளை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் திருக்கோயிலில் ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அன்னதான கூடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், கரிகிரி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-IIன்கீழ் ரூ.17.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், சேனூர் ஊராட்சியில் ரூ.36 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை கட்டிடம், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரமசாத்து, விண்ணம்பள்ளி, கரிகிரி, ஏரந்தாங்கல், மெட்டுக்குளம், சேவூர் கிராம ஊராட்சிகளில் ரூ.99.3 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடங்கள், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலேகுப்பம், பரமசாத்து, மாதாண்டகுப்பம் கிராம ஊராட்சிகளில் ரூ.93 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள் ஆகிய முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
தொடர்ந்து கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம், பனமடங்கி அரசு மேல்நிலை பள்ளியில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.197.92 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும், கொட்டமிட்டா அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ரூ.74.22 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 வகுப்பறை கட்டடம் மற்றும் குடியாத்தம் ஆர்.எஸ். அரசினர் மேல்நிலை பள்ளியில் ரூ.173.18 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 7 கூடுதல் வகுப்பறை கட்டடம், கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெங்கசாணிகுப்பம், இராமபுரம், அன்னங்குடி, பசுமாத்தூர், பில்லாந்திப்பட்டு, காவனூர், கீ.வ.குப்பம் காலனி ஆகிய இடங்களில் ரூ.115.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்கள் ஆகிய முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், தட்டப்பாறை அரசு மேல்நிலை பள்ளியில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.197.92 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பின்னர் மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், மூங்கப்பட்டு ஊராட்சியில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார மையத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் சுகாதார மையம், கூடுதல் சுகாதார கட்டிடம், சத்துணவு கூடம், பொதுசேவை மையகட்டிடம், அங்கன்வாடி மையங்கள், பள்ளி வகுப்பறை கட்டிடம், வட்டார பொது சுகாதார நிலைய கட்டிடம் என மொத்தம் ரூ.364.92 இலட்சம் மதிப்பில் 15 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
தொடர்ந்து மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர், வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு நகராட்சிகளுக்கு ரூ.40 இலட்சம் மதிப்பில் 20 இ-கார்ட் வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், விரிஞ்சிபுரம் அரசினர் மேல்நிலை பள்ளியில் ரூ.74.22 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இலவம்பாடி, மடையப்பட்டு, செதுவாலை, அகரம், கரடிகுடி, திப்பசமுத்திரம், கீரைகொட்டாய், மருதவள்ளிபாளையம், அகரம் காலனி, பாக்கம்பாளையம் மற்றும் கீழ்கிருஷ்ணாபுரம் கிராம ஊராட்சிகளில் ரூ.182.05 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் வேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புலிமேடு கிராம ஊராட்சியில் ரூ.16.45 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்கள், வேலூர் மாவட்டம், வெட்டுவானம் அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலில் ரூ.36 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொங்கல் மண்டபம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆசனாம்பட்டு ஊராட்சியில் ரூ.41.35 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார கட்டடம், நேமந்தபுரம் ஊராட்சியில் ரூ.30.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடம் ஆகிய முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், இலவம்பாடி ஊராட்சி, தார்வழி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ரூ.69.90 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 வகுப்பறையுடன்கூடிய கணினி ஆய்வக கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பின்னர் மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் தலைமையில் வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் மரு.ம.சுதாகர், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.ம.வினோத்கண்ணன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் த.வேலழகன், கீ.வ.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.தென்றல்குமார், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சுகுமார், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை, வேலூர்) பா.விஜயா, குடியாத்தம் நகர்மன்ற தலைவர் எஸ்.சௌந்தரராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா (மு.கூ.பொ), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, குடியாத்தம் நகராட்சி ஆணையர் தனலட்சுமி, இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் வே.சங்கர், செயற்பொறியாளர் பார்த்திபன், உதவி கோட்ட பொறியாளர் குமராவேலன், திருக்கோயில் செயல் அலுவலர் சிவக்குமார், அறங்காவலர் குழு தலைவர் கே.கே.என்.சங்கர், மூங்கப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் லதா சுகுமார், இலவம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment