• முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு சான்று.
முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு 2026-2027 கல்வி ஆண்டில் கல்லூரியில் சேர சார்ந்தோர் சான்று பெற்று பயனடைய வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். 2026-2027-ஆம் கல்வி ஆண்டிற்கு கல்லூரி சேர்க்கையின்போது முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பட்டயப்படிப்பு மற்றும் தொழிற் கல்விகளுக்கு தமி ழ்நாடு அரசால் சிறப்பு இட ஒதுக்கீட்டின் வாயிலாக கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க படைவிலகல் சான்றில் தமிழ்நாடு முகவரியை கொண்ட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்தம் கைம்பெண்கள் 2026-2027-ஆம் ஆண்டிற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், + 2 மதிப்பெண் சான்று, படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி சார்ந்தோர் சான்று பெற்று பயனடையுமாறும், கடந்த ஆண்டு பெற்ற சார்ந்தோர் சான்றினை பயன்படுத்த கூடாது எனவும் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.