• “நமது மக்களுக்கு நச்சில்லா உணவு கொடுப்போம்”
· “ நமது மக்களுக்கு நச்சில்லா உணவு கொடுப்போம் ”- மக்கள் நலச் சந்தை ஒருங்கிணைப்பாளர் கு . செந்தமிழ் செல்வன். இயற்கை விவசாயிகளும் நுகர்வோரும் நேரிடையாகச் சந்தித்து விற்பனை செய்து கொள்ளும் இடமே மக்கள் நலச் சந்தை (Makkal Nala Santhai- people welfare Market) கவுரமான விற்பனையில் நியாயமான விலையில் விவசாயிக்கும் , நம்பகமான பொருட்களை நிலத்திலிருந்து நேரிடையாக நுகர்வோருக்கும் கிடைக்க வகை செய்துள்ள தனித்துவமான சந்தை . எந்தவிதக் கட்டணமும் விவசாயிகளுக்கு கிடையாது . அவர்கள் விற்பனை செய்த முழுத்தொகையினை உடனுக்குடன் அவர்களின் கைகளில் கிடைக்கிறது . இயற்கை விவசாய காய்கறிகள் , பழங்கள் , கீரை வகைகள், நாட்டுப்பால் , நாட்டுக் கோழி & முட்டை , த...