• “நமது மக்களுக்கு நச்சில்லா உணவு கொடுப்போம்”

 ·         நமது மக்களுக்கு  நச்சில்லா உணவு கொடுப்போம்”- மக்கள் நலச் சந்தை ஒருங்கிணைப்பாளர் கு.செந்தமிழ் செல்வன்.

             இயற்கை  விவசாயிகளும் நுகர்வோரும் நேரிடையாகச் சந்தித்து விற்பனை  செய்து கொள்ளும் இடமே மக்கள் நலச் சந்தை (Makkal Nala Santhai- people welfare Market)

             கவுரமான விற்பனையில் நியாயமான விலையில் விவசாயிக்கும், நம்பகமான பொருட்களை நிலத்திலிருந்து நேரிடையாக நுகர்வோருக்கும் கிடைக்க வகை செய்துள்ள தனித்துவமான சந்தை.  எந்தவிதக் கட்டணமும் விவசாயிகளுக்கு கிடையாது. அவர்கள் விற்பனை செய்த முழுத்தொகையினை உடனுக்குடன் அவர்களின் கைகளில் கிடைக்கிறது.

             இயற்கை விவசாய காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள்,  நாட்டுப்பால், நாட்டுக் கோழி & முட்டை, தேன், வேர்கடலை, சிறு தானியங்கள், மஞ்சள், நெல்லி, பாரம்பரிய அரிசி வகைகள் என பலவும் விற்பனைக்கு கிடைக்கும்

             இயற்கை விவசாயப் பொருட்கள் மதிப்புக் கூட்டுதல் செய்துவரும் தொழில்முனைவோரும் தங்கள் பொருட்களை அவர்களே விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

             மக்கள் நலச் சந்தை இரண்டாம் சனிக்கிழமை வேலூர், காந்தி நகரிலும் நடைபெற்று வருகிறது

             வேலூர், காந்தி நகர் சந்தை : ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமைகளில் காலை 6..மணி முதல் மதியம் 2..00 மணி வரை நடைபெறுகிறது,

இடம் : திருமகள் திருமண மண்டபம், காந்தி நகர், வேலூர்

ஒருங்கிணைப்பாளர்: திரு கு.செந்தமிழ் செல்வன்

மக்கள் நலச் சந்தையினைத் துவக்கி வைத்தவர் மரியாதைக்குரிய விஐடி பல்கலைகழகத்தின் துணைத் தலைவர்  திரு ஜி.வி.செல்வம் அவர்கள்.

இதுவரை 18 மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுள்ளது.

 மக்கள் ஆதரவு ஒவ்வொரு மாதமும் பெருகி வருகிறது. நகரப்பகுதி மக்களிடம் இயற்கை  குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ளது.

சந்தையில் பாரம்பரிய அரிசியில் இட்லியும் மதியம் காளாண் பிரியாணியும் சுடச்சுடத் தரப்படுகிறது. முடவாட்டுக்கிழங்கு சூப், ஆடாதொடை, லெமன் கிராஸ் கல்யான முருங்கை ஆகியன கலந்த மூலிகை சூப், சிறுதானியத்தில் கங்சி வகைகள், தேங்காய் பால், விற்கப்படுகிறது.

பசுமையான காய்கறிகள், கத்தரி, வெண்டைக்காய், சுரக்காய், பாகற்காய் போன்றவைகள் நிலத்திலிருந்து நேரிடையாக விற்பனைக்கு வருகின்றன.

சிறுதானியத்தை குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் அவல், பிஸ்கட் என விற்கப்படுகிறது.

சக்கரை நோயாளிகளுக்கான வரப்பிரசாதமாக கருப்புக்கவுனியில் மாவு தயாரித்து விற்கப்படுகிறது.

மக்கள் நலச் சந்தை - விற்கும் இடமல்ல, கற்கும் களம்.

விஐடி - வயல் நிறுவனம் சார்பாக மண் பரிசோதனை இலவசமாகச் செய்யப்படுகிறது

ஒவ்வொரு நுகர்வோர்களிடமும் விவசாயிகள் இயற்கை விவசாய முறையினை விளக்குகிறார்கள்.

விற்கப்படும் பொருட்களின் முக்கியத்துவத்தினை விளக்கிட வாடிக்கையாளர்களுக்கான  வாட்ஸ் ஆப் குரூப் செயல்படுகிறது. இதுவரை 3000 பேர்களுக்கு இணைந்துள்ளனர். புதிதாக இணைய விரும்புபவர்கள் 9443032436 எண்ணிற்கு தகவல்கொடுத்தால்போதும்.

             மக்கள் நலச் சந்தை ஒருங்கிணைப்புக் குழு : சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட இயற்கை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை விவசாயிகளை உள்ளடக்கிய குழு இந்த சந்தையினை வழி நடத்துகிறது. எந்தவித இலாப நோக்கும் இன்றி  இந்த சந்தை நடைபெறுகிறது. ஒருங்கிணைப்புக் குழுவினர்களும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இதில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கு.செந்தமிழ் செல்வன் ஏற்கனவே மூன்று ஆண்டு காலமாக செயல்படும் நம் சந்தையினை துவக்கி நடத்தியதில் பெருங்காற்றியவர். இயற்கை விவசாயிகளை தொடர்ந்து ஒருங்கிணைத்து வருபவர்.

             விவசாயிகள் கவனத்திற்கு:

             இயற்கை விவசாயிகள் விற்பனை செய்ய பதிவு செய்து கொள்ளப்படுவார்கள்.

             இயற்கை விவசாயி என சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை.         மக்கள் நலச் சந்தை குழுவினர் நிலம் பார்வையிட்டு உறுதி செய்வார்கள்.

             பிளாஸ்டிக்  பொருட்கள் அனுமதியில்லை.

             தேவையான பைகளை காய்கறிகளை வாங்குபவர்களே கொண்டு வரவேண்டும்

             மக்கள் நலச் சந்தை  ஒருங்கிணைப்புக் குழு பொதுவாக விலை நிர்ணயம் செய்யும்.உழவர் சந்தை விலையுடன் 20% கூடுதலாக விற்கப்படும்.

             தங்களது நிலத்தின் உற்பத்தியினை மட்டும் கொண்டு வரவேண்டும். பிறருடைய பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்யக் கூடாது.

             நிலத்திலிருந்து நேரிடையாக விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருக்கக் கூடாது

             சந்தையில் நுகர்வோருக்கு மட்டுமே விற்கலாம்.

             விவசாயிகள் கொண்டுவரும் பொருட்களை  அவர்களே விற்க வேண்டும். விற்பனை செய்ய இயலாததையும் அவர்களே கொண்டு செல்ல வேன்டும்.

             அவர்களது பொருட்களுக்கான லாப-நட்டம் அவர்களைச்  சார்ந்ததே.

             தரமான தராசினை அவர்களே கொண்டு வர வேண்டும்.

             புதிய இயற்கை விவசாயிகளை தொடர்பு படுத்துங்கள்.

நுகர்வோரின் கவனத்திற்கு:

             தரமான, புதிதான காய்கறிகள், பழங்கள், கீரைகள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் கிடைக்கும். இயற்கை விவசாயப்பொருள் என்பதை நம்பிக்கையுடன் வாங்கிச் செல்லாம். பேரம் பேசுவதைத் தவிர்க்க வேண்டுகிறோம்.

             நச்சில்லா உணவினை உங்கள் குடும்பத்தாருக்கு கிடைக்க இது சிறந்த ஏற்பாடு.

             உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு இந்தச் செய்தியினை சொல்லி உதவுங்கள்

இயற்கை ஆர்வலர்கள் கவனத்திற்கு:

             இயற்கை நேசிப்ப்பே, இயற்கை விவசாயம்.

             மாற்றங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவர்கள் நீங்கள்

             மக்களிடமும் மாணவர்களிடமும் பிரச்சாரம் கொண்டு செல்ல மக்கள் நலச் சந்தை துவக்கியுள்ள இந்த இயக்கத்தில்  ஒருங்கிணைப்பாளர்களுடன்  தொடர்பு கொண்டு இணையுங்கள்.

திரு. கு.செந்தமிழ் செல்வன், (ஒருங்கிணைப்பாளர், மக்கள் நலச் சந்தை, காந்திநகர், வேலூர் ), 9443032436

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.