• விவசாய விளைநிலங்களை தொழிற்பேட்டைக்காக கையகப்படுத்த கூடாது

 ·         விவசாய விளைநிலங்களை தொழிற்பேட்டைக்காக கையகப்படுத்த கூடாது .

·         மதுவை டெட்ரா பேக்குகளில் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் - பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் பேட்டி 

     ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளின் வாக்குசாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

     இதில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இளவழகன் மற்றும் நிர்வாகிகள் கிருஷ்ணன் சக்கரவர்த்தி, முரளி, முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம் உள்ளிட்ட  திரளான பாமக வினர் பங்கேற்றனர்.

                இதில் சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

                முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,

     ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாமக வாக்குசாவடி செயல் வீரர்கள் கூட்டத்திற்கு வருகை தந்தோம். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். 30 ஆண்டுகளாக பாலாற்றில் தடுப்பணைகளை கட்ட பாமக போராடி வருகிறது.

     இந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்தவர் நீர்வளத்துறை அமைச்சர் அவர் ஆட்சி காலத்தில் குறைந்தது ஐந்து தடுப்பணைகளையாவது கட்ட வேண்டும். இரண்டரை ஆண்டு ஆட்சி முடிந்துவிட்டது. இனிவரும் காலத்திலாவது பாலாற்றில் தடுப்பணையை கட்டுவோம் என நீர் வளத்துறை அமைச்சர் அறிவிக்க வேண்டும். பாலாற்றிலிருந்து மழை காலங்களில் 20 டி.எம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. மழைகாலங்களில் நாம் நீரை சேமிக்க தடுப்பணைகளை கட்ட வேண்டும்.

     ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடக்கிறது. தமிழகம் கஞ்சா மாநிலமாக மாறியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை நடக்கிறது.

      கடலூரில் கஞ்சா போதை மகன் தாயை கொலை செய்தான். போதை ஒழிப்பு பிரிவு காவலர்கள் பற்றாக்குறையை போக்க 20 ஆயிரம் காவலர்களை தற்காலிகமாக நியமனம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ராணுவத்தினர் உள்ளிட்டவர்களை தற்காலிகமாக பணி நியமனம் செய்ய வேண்டும்.

     மதுவை காட்டிலும் அதற்கு அடுத்தாக கஞ்சா உள்ளது. மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி மதுவை டெட்ரா பேக்கில் விற்பதற்கு ஆர்வம் காட்டுகிறார். நாங்கள் ஏற்கனவே விளையாட்டு போட்டிகளில் மது விநியோகத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தோம். அரசுக்கு மதுவை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு துளியும் கிடையாது.

                7 ஆண்டுகளுக்கு முன்பாக முதல்வர் மதுவிலக்கு கொண்டு வருவதாக கூறினார். ஆனால் அவர் கொள்கையை மாற்றி கொண்டாரா அல்லது கடையை மூட மாட்டோம் என முதல்வரே சொல்லுங்கள். மது ஒழிப்பு கொள்கையில் உடன்பாடில்லை என்றாவது சொல்ல வேண்டும். மது விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள், இளைஞர்களும் பாதிப்பு இதனை ஒழிக்க வேண்டும்.

     தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். பீகார் நடத்தி முடித்து 75 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளனர். ஆந்திராவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவுள்ளனர். தெலுங்கானாவிலும் நடத்துவதாக அறிவித்துள்ளனர். தந்தை பெரியார் கொள்கை என திமுக சொல்லி கொள்வது பேச்சில் மட்டும்தான். சமூக நீதி எங்கு உள்ளது? முன்னேறிய ஜாதியாக இருந்தாலும் சரி. ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

     தமிழகத்தில் 69 விழுக்காடு அட்டைவணையில் இல்லை என்றால் அதனை பாதுகாத்திருக்க முடியாது. எனவே தமிழக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இதனை மாநில அரசே நடத்தலாம். இந்த அடிப்படையில்தான் பீகாரில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்தனர். ஜாதி வாரி கணக்கெடுப்பை நாங்கள் நடத்தமாட்டோம். எண்ணம் கிடையாது என முதல்வர் சொல்லிவிட்டு போகட்டும். அதை செய்யவில்லை என்றால் நீங்கள் சமூக நீதி பற்றி பேசாதீர்கள். தந்தை பெரியார் பெயரை பயன்படுத்தாதீர்கள். அதிகாரம் இருந்தும் தமிழக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பை செய்யவில்லை. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

         திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சிப்காட் தொழிற்சாலைகள் வேண்டும். ஆனால் விளைநிலங்களில் சிப்காட் என்பதை வேண்டாம் என்று சொல்கிறோம்.  வேலைவாய்ப்பும், சிப்காட்டும் வேண்டும். ஆனால் விளைநிலங்களை அழிப்போம் என்பது வளர்ச்சி கிடையாது. தொழிற்சாலையையும் விவசாயத்தையும் சமமாக கொண்டு செல்வது வளர்ச்சி. வரும் காலத்தில் உணவு பற்றாக்குறை, நீர் பற்றாகுறை வரும் என ஐ.நா. சொல்லியுள்ளது.

     தமிழகத்தில் 42 லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவைகள் எல்லாம் முக்கியமான பிரச்சனைகள். அரசு கவனம் செலுத்த வேண்டும். பாமக மணல் கொள்ளைக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருகிறது. ஆனால் அதற்காகதான் அவர்கள் தடுப்பணையை கட்டமாட்டேன் என்று கூறுகிறார்கள். ஆனால் மணல் அள்ளுகின்றனர். நாம் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். திராவிட ஆட்சிகளில் 55 ஆண்டு காலத்தில் சேரி பகுதிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.

     ஆளுநர்கள் கோப்புகளை நீண்ட நாள் வைக்க கூடாது என உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது. இதில் தமிழகத்தில் ஆளுநரும் முதல்வரும் இணைந்து செயல்படவேண்டும். இல்லை என்றால் மக்களுக்குதான் பாதிப்பு. மருத்துவ கல்லூரிகள் புதியதாக துவங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு திரும்ப பெற்றது வரவேற்கதக்கது. இதனை நானும் மத்திய அரசிடம் வலியுறுத்தினேன் என கூறினார்.

பேட்டி: அன்புமணிராமதாஸ் (பாமக தலைவர்).

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.