வேலூரில் அரசு ஊழியர் சங்கம், ஜாக்டோ ஜியோ ஆதரவு ஆர்ப்பாட்டம்
· தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க வேலை நிறுத்தம் - வேலூரில் அரசு ஊழியர் சங்கம், ஜாக்டோ ஜியோ ஆதரவு ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர் சங்கமும், ஜாக்டோ ஜியோ - வும் இன்று 28.02.2024 மாலை வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . ` ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அ . சேகர் , தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் செ . நா . ஜனார்த்தனன் ஆகியோர் தலைமை தாங்கினர் . தமிழ்நாடு உருது வழி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் முகமது ஷாநவாஸ் , ஜாக்டோ செய்தி தொடர்பாளர் வாரா , அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைதலைவர் மகேஸ்வரி , அ...