வேலூரில் அரசு ஊழியர் சங்கம், ஜாக்டோ ஜியோ ஆதரவு ஆர்ப்பாட்டம்

·         தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க வேலை நிறுத்தம் - வேலூரில் அரசு ஊழியர் சங்கம், ஜாக்டோ ஜியோ ஆதரவு ஆர்ப்பாட்டம்.

 

        தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர் சங்கமும், ஜாக்டோ ஜியோ-வும் இன்று 28.02.2024 மாலை வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

      `           ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் .சேகர், தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் தலைமை தாங்கினர்

 

        தமிழ்நாடு உருது வழி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் முகமது ஷாநவாஸ், ஜாக்டோ செய்தி தொடர்பாளர் வாரா, அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைதலைவர் மகேஸ்வரி, அரசு ஊழியர் சங்க பொருளாளர் எஸ்.சுமதி, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஜி.சீனிவாசன், இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர்  பெ.இளங்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

         இந்த ஆர்ப்பாட்டத்தில் வருவாய் துறை அலுவலர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளை தீர்க்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்

 

Comments