Posts

Showing posts from May, 2024

• இந்திய விமானப்படையின் அக்னிவீர் வாயு இசைக் கலைஞர் ஆட்சேர்ப்பு தேர்விற்கான பதிவு.

·          இந்திய விமானப்படையின் அக்னிவீர் வாயு இசைக் கலைஞர் ஆட்சேர்ப்பு தேர்விற்கான பதிவு இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2024. வேலூர் மாவட்டத்தில் தகுதியுடைய   இசைக்கலைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெற மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.                 இந்திய விமானப்படையின் அக்னிவீர் வாயு இசைக் கலைஞர் ஆட்சேர்ப்பு தேர்விற்கான பதிவு இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2024 ஆகும் . இத்தேர்வு பெங்களுரில் அமைந்துள்ள 7- வது ஏர்மேன் மையத்தில் இந்திய இராணுவத்தால் 03.07.2024 முதல் 12.07.2024 வரை ஆட்சேர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது . அக்னிவீர் வாயு இசைக் கலைஞர் தேர்வுக்கு 02.01.2004 முதல் 02.07.2007 வரை பிறந்த திருமணமாகாத   இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார் .                    இத்தேர்வுக்கு மெட்ரிகுலேஷன் / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இசைத்திறன் Tempo, Pitch- ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . மற்றும் தனிப்பட்ட கருவிகளை டியூன் செய்ய வேண்டும் . Concert Flute / Piccolo, Obeo, C

• தென்மேற்கு பருவமழை வேலூர் மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்.

Image
·          தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுட னான ஆலோசனைக் கூட்டம்.                 தமிழகத்தில் எதிர்வரும் 01.0 6 . 2024 முதல் தென்மேற்கு பருவமழை 2024 தொடங்கப்பட உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது . கடந்த 2023 - ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை வேலூர் மாவட்டத்தில் 573.5 மி.மீ பெய்துள்ளது . இது இயல்பை விட 33 சதவீதம் கூடுதலான மழையாக உள்ளது .                         இந்நிலையில் எதிர்வரும் தென்மேற்கு பருவமழை 2024 - யை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுட னான ஆலோசனை க் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்   நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது ,                 தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் மாவட்டத்தில் மழைநீர் தேங்ககூடிய தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அங்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்

• வேலூர் மாவட்டத்தில் ”புதுமைப்பெண்” திட்டத்தில் சேர்த்து பயன்பெற வழிவகை.

·          வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவிகள் உயர் கல்வியில் சேரும்போது கல்லூரி நிர்வாகம் அம்மாணவியரை ” புதுமைப்பெண் ”    திட்டத்தில் சேர்த்து பயன்பெற வழிவகை செய்தல் அவசியம் - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் .             தமிழக அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் புதுமைப்பெண் திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 6- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ .1,000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு மாணவிகள் பயனடைந்து வருகின்றனர் . இந்த திட்டத்தால் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளனர் .   வேலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம்    8,478   மாணவிகள் மாதம் 1,000 /- ரூபாய் பெற்று வருகின்றனர் .   இந்த மாணவிகள் ஏற்கனவே பிறகல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவித்தொகை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது .           

• ஒருங்கிணைந்த குடிமைப் பணியியல் தேர்வு தொகுதி 4 - பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.

Image
  ·          தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தி ன் சார்பில் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணியி ய ல் தேர்வு தொகுதி 4   தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.                 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமை பணியி ய ல் தேர்வு தொகுதி 4 - க்கான தேர்வுகள் வருகின்ற 09.06.2024 அன்று நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணியி ய ல் தேர்வு தொகுதி 4-க்கான தேர்வுகள்     வேலூர் , காட்பாடி , அணைக்கட்டு , கே . வி . குப்பம் , குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு ஆகிய 6 மையங்களில் நடைபெற   உள்ளது.   இந்த 6 மையங்களில் மொத்தம் 13 தேர்வு கூடங்கள் உள்ளன . மொத்தம் 36,705 தேர்வர்கள் இத்தேர்வுகளில் கலந்து கொள்ள உள்ளனர்.                         இத்தேர்வின் போ து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த துறை சார்ந்த அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே .இரா. சுப்பு லெ ட்சுமி , தலைமையில் ஆட்சியர் அலுவலக கூ