• இந்திய விமானப்படையின் அக்னிவீர் வாயு இசைக் கலைஞர் ஆட்சேர்ப்பு தேர்விற்கான பதிவு.

·         இந்திய விமானப்படையின் அக்னிவீர் வாயு இசைக் கலைஞர் ஆட்சேர்ப்பு தேர்விற்கான பதிவு இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2024. வேலூர் மாவட்டத்தில் தகுதியுடைய  இசைக்கலைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெற மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

                இந்திய விமானப்படையின் அக்னிவீர் வாயு இசைக் கலைஞர் ஆட்சேர்ப்பு தேர்விற்கான பதிவு இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2024 ஆகும். இத்தேர்வு பெங்களுரில் அமைந்துள்ள 7-வது ஏர்மேன் மையத்தில் இந்திய இராணுவத்தால் 03.07.2024 முதல் 12.07.2024 வரை ஆட்சேர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது. அக்னிவீர் வாயு இசைக் கலைஞர் தேர்வுக்கு 02.01.2004 முதல் 02.07.2007 வரை பிறந்த திருமணமாகாத  இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்.

                   இத்தேர்வுக்கு மெட்ரிகுலேஷன் / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இசைத்திறன் Tempo, Pitch-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் தனிப்பட்ட கருவிகளை டியூன் செய்ய வேண்டும். Concert Flute / Piccolo, Obeo, Clarinet in Eb/Bb, Saxophone in Eb/Bb, French Horn in F/Bb, Trumpet in Eb/C/Bb, Trombone in Bb/G, Baritone, Euphonium, Bass/Tuba in Eb/Bb, Keyboard/Organ/Piano, Guitar (Acoustic/Lead/Bass), Violin, Viola, String Bass, Percussion/ Drums (Acoustic/Electronic), All Indian Classical Instruments மேற்கூறிய கருவி ஒன்றினை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் ஹிந்துஸ்தானி அல்லது கர்னாடிக் இசையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

          ஆர்வமுள்ள இளைஞர்கள் https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், தகவல்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் அல்லது தொலைபேசி எண்.0416-2290042 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அக்னிவீர் இசைக் கலைஞர் தேர்வில் பங்குபெற்று பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

                                                              

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.