· வேலூர் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் திட்டத்தின்கீழ் கூடுதல் டிராக்டர்கள் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் வகையிலும், வேளாண் பணிகளை குறித்த நேரத்தில் மேற்கொள்ளவும், வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், பயிர் சாகுபடி செலவினங்களை குறைக்கவும், நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வேளாண்மையை மேம்படுத்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாய பெருமக்கள் உழவு பணிகளை எளிதில் மேற்கொள்ளும் வகையில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் டிராக்டர்கள் மற்றும் டிராக்டருடன் இயங்கும் சுழற்கலப்பை 5 கொத்து, 9 கொத்து கலப்பை உள்ளிட்ட பல்வேறு கருவிகளையும் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் (மணிக்கு ரூ.500/- வீதம்) வழங்கப்பட்டு வருகிறது. ...