• தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி–II & IIA –க்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு.
வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த படித்த இளைஞர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி–II & IIA –க்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் அதிக அளவில் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNSURB மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி–II தேர்விற்கு 507 காலிப் பணியிடங்களும், தொகுதி–IIA தேர்விற்கு 1,820 காலிப் பணியிடங்களுக்கானஅறிவிப்பு 20.06.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தொகுதி–II & IIA-க்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு 05.07.2024 முதல் நடத்தப்பட இருக்கிறது. அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் அல்லது தொலைபேசி எண்.0416 2290042 மற்றும்9499055896 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அதிக அளவிலான கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment