• வேலூர் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் திட்டம்.

·        வேலூர் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் திட்டத்தின்கீழ் கூடுதல் டிராக்டர்கள் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

                வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் வகையிலும், வேளாண் பணிகளை குறித்த நேரத்தில் மேற்கொள்ளவும், வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், பயிர் சாகுபடி செலவினங்களை குறைக்கவும், நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வேளாண்மையை மேம்படுத்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

         விவசாய பெருமக்கள் உழவு பணிகளை எளிதில் மேற்கொள்ளும் வகையில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் டிராக்டர்கள் மற்றும் டிராக்டருடன் இயங்கும் சுழற்கலப்பை 5 கொத்து, 9 கொத்து கலப்பை உள்ளிட்ட பல்வேறு கருவிகளையும் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் (மணிக்கு ரூ.500/- வீதம்) வழங்கப்பட்டு  வருகிறது.

                இந்நிலையில் அனைத்து விவசாயிகளும் வேளாண்மை பொறியில் துறை மூலம் வேளாண் இயந்திரங்களை எளிதில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஊராட்சி ஒன்றியத்திற்கு 1 டிராக்டர் வீதம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது.

                வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 4 டிராக்டர்கள் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுவரும் நிலையில் தற்போது 4 புதிய டிராக்டர்கள் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

                இந்த டிராக்டர்கள் 7 ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் தலா 1 டிராக்டர்  என விவசாயிகள் பயன்பாட்டிற்கு நிறுத்தி வைக்கப்படும்.

                வேளாண் இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள் இ-வாடகை செயலியின் மூலம் தங்கள் வீட்டில் இருந்தபடியே பதிவு செய்து கொள்ளலாம். இ வாடகை செயலியில் பதிவு செய்ய கீழ்க்கண்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

வட்டாரம்

உதவி பொறியாளர்(வே.பொ)/

இளநிலைப்பொறியாளர்

தொலைபேசி எண்

வேலூர் மற்றும் கணியாம்பாடி

R.H.அண்ணாதுரை

9487105115

அணைக்கட்டு

R.இரவி

9443006742

பேர்ணாம்பட்டு

S.துளசிதரன்

7708235088

குடியாத்தம்

V. வித்யாசாகர்

7598132289

கே.வி.குப்பம்

R. ஆனந்தன்

9894413644

காட்பாடி

S. சம்பத்ராஜ்

9487679302

எனவே வாடகைக்கு வேளாண் இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள் இ-வாடகை செயலியில் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.