• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.
· பல்வேறு துறைகளில் சென்சாரின் செயல்பாடுகள் - கல்லூரி இயக்குனர் பேராசிரியர் டாக்டர் மா.அருளரசு.
சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின்கீழ் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவ்வறக்கட்டளையின் காஞ்சிபுரம் மாவட்டம், ஊவேரியில் பீ.டி.லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியும் செயல்படுகிறது. இக்கல்லூரியில், அறக்கட்டளை தலைவர் நீதியரசர் பொன்.கலையரசன் மற்றும் அறங்காவலர்களின் வழிகாட்டுதல்களோடு தொடர்ந்து பல கல்விசார் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இக்கல்லூரியில் செயல்படும் எந்திரவியல் துறை சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்க நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர் பேராசிரியர் டாக்டர் மா.அருளரசு மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் பி.பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இக்கருத்தரங்கில் சிறப்பு கருத்தாளராக கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியின் (GCT) இயந்திரவியல் துறை தலைவர் மற்றும் இணைபேராசிரியர் டாக்டர் டி.சேகர் கலந்து கொண்டு இன்றைய நிலையில் இயந்திரவியல் துறையின் வளர்ச்சி சென்சார் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் பூபதி வரவேற்புரை வழங்கினார். டாக்டர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சியை பேராசிரியர் அன்புமணி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இந்த இயந்திரவியல் கருத்தரங்கில், கல்லூரி இயக்குனர் பேராசிரியர் டாக்டர் அருளரசு மாணவர்களிடையே உற்சாகமூட்டும் வகையில், அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில், வருங்காலத்தில் பல்வேறு துறைகளில் சென்சாரின் செயல்பாடுகள், பயன்கள் குறித்தும் மாணவர்கள் எளிதில் புரியும் வகையில் விளக்கி பேசினார்.
Comments
Post a Comment